ரோகித் சர்மா, கோலியின் அபார சதம்: இந்தியா வெற்றி

இந்தியா - நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட இத்தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

முதலில் விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் விராத் கோலி அடித்த அபார சதத்தினால் இந்திய 337 ரன்களை இலக்காக வைத்தது. ரோகித் சர்மா 147 ரன்களும், கோலி 113 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து, 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது.

இத்தொடரில் முதல் இரண்டு போட்டியின் முடிவில் 1-1 என்ற சமநிலையில் இருந்தது. இன்றைய கடைசி போட்டியின் வெற்றி மூலம் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :