ஸ்பெயின் ஒற்றுமைக்காக ஒன்று கூடிய பார்சிலோனா மக்கள்

கேட்டலோனியா அரசு ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவித்ததையடுத்து, ஸ்பெயினின் ஒற்றுமைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டலோனியா தலைநகரான பார்சிலோனாவில் பேரணி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒன்றுகூடி வருகின்றனர்.

இந்தப் பேரணிக்கு அனைத்து முக்கிய தேசிய கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. கேட்டலோனியாவின் தன்னாட்சி அரசாங்கத்தைக் கலைத்து, கேட்டலோனியா அரசாங்கத்தின் பொறுப்பை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ஸ்பெயின் அரசு கூறியுள்ளது. மேலும், அங்குத் தேர்தலையும் ஸ்பெயின் அறிவித்துள்ளது.

ஸ்பெயின் அரசு கூறியுள்ளதை நிராகரித்த பிரிவினைவாதிகள், தங்களது பிராந்திய தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் தொடர்ந்து பதவியில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஸ்பெயினின் நேரடி தலையீடு, 'ஜனநாயக எதிர்ப்பு' என்று பூஜ்டிமோன் வர்ணித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :