You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிஎஸ்டியை விமர்சித்த மெர்சல், மெர்சலை விமர்சித்த தமிழிசை, தமிழிசையை தாக்கும் இணையவாசிகள்!
மெர்சல் படத்தில், மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே திரையரங்க கட்டண விவகாரம், விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் காட்சிகள் என தொடர்ந்து சமூக வலைதள விவாதங்களில் முக்கிய இடத்தை மெர்சல் திரைப்படம் பிடித்திருந்தது.
வியாழன்று தமிழிசை அவ்வாறு கூறியதன் பின்னர் தமிழிசையின் பெயரும் சமூக வலைதள விவாதங்களில் இடம்பெற்று வருகிறது.
நடிகர் விஜயின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் தமிழிசை அவ்வாறு கூறியதை விமர்சித்து தங்களது கருத்துகளை கேலியாகவும், மீம்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
மத்திய தணிக்கை குழுவிலேயே ஒரு பாஜக உறுப்பினர் உள்ளாரே!
சுப்பிரமணியன்சாமி பேசினால் மட்டும் கருத்து சுதந்திரமா என்கிறார் 'பயங்கர கோபக்காரன்.'
சமீபத்தில் நடிகர் சந்தானத்துக்கு, பாஜக பிரமுகர் ஒருவருக்கும் இடையே இருந்த பணப் பிரச்சனையில் சந்தானம் தம்மைத் தாக்கியதாகப் புகார் கூறினார் அந்த நிர்வாகி.
சந்தானத்தைக் கண்டித்து பாஜகவினர் பல இடங்களில் சுவரொட்டி ஒட்டியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆண்டு 2019 நெருங்குகிறது என்கிறார் இவர்.
பிரபல ஃபேஸ்புக் பதிவர் தமிழச்சியும் இவ்விவகாரத்தில் ஒரு கருத்து கூறியுள்ளார்.
ஆனால், அவரது பதிலுரை தமிழிசைக்கு அல்ல. இன்னொரு பாஜக தலைவர் இல.கணேசன் கூறியதற்கு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்