'மாநில உரிமைகளை பறிக்கும் செயல்' : நீட் விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் கொந்தளிப்பு

நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றும், 24-ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது பல்வேறு விவாதங்களை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலுக்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் தொடர்பு உள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் எச். ராஜா உள்ளிட்டோர் நீட் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :