14-ஆவது இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு

பட மூலாதாரம், PRDBIHAR.GOV.IN
இந்திய குடியரசுத்தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சுமார் 65.65 சதம் வாக்குகளைப் பெற்ற ராம்நாத் கோவிந்த், நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.
ராம்நாத் கோவிந்த் 2930 வாக்குகள் பெற்றார். அவற்றின் மதிப்பு 7,02,044.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மக்களவைத் தலைவர் மீராகுமார், 34.35 சதம் வாக்குகளுடன் 1844 வாக்குகளைப் பெற்றார். அவற்றின் மதிப்பு 3,67,314.
மக்களவை பொதுச் செயலர் அனூப் மிஸ்ரா இந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மோதி வாழ்த்து
குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், twitter
குடியரசுத் தலைவராக உங்கள் பணி, வெற்றிகரமானதாக, எடுத்துக்காாட்டானதாக அமைய வாழ்த்துக்கள் என மோதி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் ராம்நாத் கோவிந்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












