You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரங்களுக்கு ''மறுவாழ்வு" கொடுத்த எம்.எல்.ஏ; சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு
ஆந்திராவில் சட்டசபை உறுப்பினர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக வெட்டப்படவிருந்த மரங்களை, தனது சொந்த செலவில் இடமாற்றம் செய்து காப்பாற்றியிருக்கிறார்.
பென்னமலுரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான போட் பிரசாத், ஒரு லட்சம் ரூபாய் செலவழித்து, விஜயவாடா-மச்சிலிபட்டினம் நெடுஞ்சாலையை அமைப்பதற்காக, வெட்டப்படுவதாக இருந்த நான்கு அரச மரங்களை வேறு இடத்தில் நட்டு வைக்க நடவடிக்கை எடுத்தார்.
"இந்த நான்கு மரங்களை சிறுவயதிலிருந்து பார்த்து வருகிறேன், ஆகையால் இதை வெட்டுவதை நான் விரும்பவில்லை" என பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.
உள்ளூர் பஞ்சாயத்தில் பணம் இல்லாததால் மரத்தை வேறு இடத்தில் நடுவதற்கான தொகையை தானே ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
ஞாயிறன்று நான்கு மரங்களையும் கிரேன்கள் மூலம் வேற்று இடத்தில் நடப்படுவதை தானே கண்காணித்தார் பிரசாத்.
மரங்கள் கிரேன்கள் மூலம் அகற்றப்படுவதற்காக பணியாட்கள் மரங்களின் சில கிளைகளை மட்டும் அகற்றினர் .
சாலைகள் அமைவதற்கு தான் எதிரானவர் அல்ல, ஆனால் சாலைகள் விரிவாக்கப்படும் போதும், நெடுஞ்சாலைகள் உருவாகும் போதும் மரங்கள் வெட்டப்படக் கூடாது என்று தெரிவிக்கிறார்.
சட்ட மன்ற உறுப்பினர் பிரசாத்தின் இந்த முயற்சி சமூக வலைத்தளங்களில் பலரால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது; அவரின் இந்த செய்கை பலரும் பின்பற்ற வேண்டிய உதாரணமாக அமைந்துள்ளது என சமூக வலைத்தளத்தில் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு தொடர்புடைய பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்