பால் மரத்துப்போன மாடுகளை பா.ஜ.கவினரின் வீட்டுவாசலில் கட்டுங்கள்: லாலுபிரசாத்

பட மூலாதாரம், PRAKASH SINGH
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 'பால் மரத்துப்போன மாடுகளை பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களின் வீட்டிற்கு வெளியே கட்டுங்கள்' என்று தனது கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
வியாழனன்று நடைபெற்ற கட்சித் தொண்டர்களுக்கான பயிலரங்கில் உரையாற்றிய லாலு, " உங்கள் பகுதியில் இருக்கும் அனைத்து வயதான மாடுகளை கொண்டுபோய் பசு பாதுகாவலர்கள் என்று பெருமையடித்துக் கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியினர் ஒவ்வொருரின் வீட்டு வாசல்களிலும் கட்டுங்கள்" என்று கூறினார்.
"அவர்கள் அடிதடியில் இறங்குவார்கள், இறங்கட்டும், நாம் அவர்களை அமைதிப்படுத்துவோம்" என்று லாலு அறிவுறுத்தியிருக்கிறார்.
"பால் கறக்காத மாடுகளை பாரதீய ஜனதா கட்சி அலுவலகங்களுக்கு வெளியில் கட்டுங்கள், அப்புறம் பார்க்கலாம், நாய் வளர்ப்பும், மாடு வளர்ப்பும் ஒன்றுதான் என நினைக்கும் பசு பாதுகாவலர்கள், வயதான மாடுகளை என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று தொண்டர்களிடம் கூறியிருக்கிறேன்" என்று தனது ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
சங்கராச்சாரியார்களை நியமனம் செய்யும்போது, அதிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும் என்று முன்னதாக லாலூ யாதவ் கோரிக்கை விடுத்திருந்தார். "நான்கு மடங்களிலும் இட ஒதுக்கீட்டின்படியே மடாதிபதிகள் நியமிக்கவேண்டும். ஒரே வர்ணத்தை, சாதியை சேர்ந்தவர்களுக்கே அந்தப் பதவி ஒதுக்கப்படவேண்டுமா என்ன? யார் சாதியவாதி என்று சொல்லுங்கள்" என்று அவர் கேட்டிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












