You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பரபரப்பான ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கவுள்ளது
ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவுக்கு, இன்னும் சற்று நேரத்தில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படவுள்ளன.
11 வேட்பாளர்கள் போட்டியிடும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், முதல் நான்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது.
இது வரை அரசு பதவிகளில் அங்கம் வகித்திராத தாராளவாத மையவாதியான இமானுவேல் மக்ரோங், தேசியவாத வலது சாரியான மர்ரீன் ல பென் மற்றும் இடதுசாரியான ஷான்-லூக் மெலாங்ஷாங் ஆகிய வேட்பாளர்களும் நான்கு முக்கிய வேட்பாளர்களில் உள்ளடங்குவர்.
இவர்களின் முக்கிய எதிரணி வேட்பாளரான பழமைவாத தலைவரும், குடியரசு கட்சியை சேர்ந்தவருமான பிரான்சுவா ஃபியோங் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல அமைச்சரவை பதவிகளை வகித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வேட்பாளர்களான இந்த நால்வரில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கும் சூழல் தற்போது இல்லை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முன்னணியில் இருக்கும் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இறுதி போட்டி மே 7-ஆம் தேதியன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நாடெங்கும் 50, 000 போலீசாரும், 7000 படையினரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்