லெகின்ஸ் அணிந்திருந்த பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை

அமெரிக்க விமான சேவை நிறுவனமான யுனைடட் , இரண்டு பெண் பயணிகள், லெகின்ஸ் எனப்படும் உடையை அணிந்திருந்ததால், அவர்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்தது குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காணொளிக் குறிப்பு, லெக்கின்ஸ் ஆபாச உடையா?

ஞாயிறன்று டென்வரிலிருந்து மினியாபொலிசுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அந்த பெண்கள், விமான சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் விருந்தினர்களுக்கான சிறப்பு பயணச் சீட்டில் பயணம் செய்ததாகவும் அதற்கு ஆடை விதிகள் இருப்பதாகவும் யுனைடட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுனைடட் நிறுவனத்தின் டிவிட்டர் கருத்துக்களுக்கும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன

பட மூலாதாரம், Reuters

மேலும் பிற பயணிகள் லெகின்ஸ் அணியலாம் என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அந்த பெண்கள் "ஊழியர்கள் அல்லது அவர்களின் உறவினர்களுக்கான பயணச் சீட்டு பயணிகள்" என இது குறித்து டிவிட்டரில் ஏற்பட்ட விவாதத்தில் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

"விமானச் சேவையின் சிறப்பு பயணச்சீட்டை" உடையவர்கள் இலவசமாகவும் அல்லது பெரிய அளவிலான விலை தள்ளுபடியிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த சிறப்பு பயணச்சீட்டிற்கான ஆடை கட்டுப்பாட்டில், "இறுகலான மேலாடை, கால் சட்டை, தொப்புள் தெரியும்படியான ஆடைகள், குட்டை பாவாடை மற்றும் ரப்பர் செருப்புகள்" ஆகியவையும் அடங்கும்.

பிபிசி தமிழின் பிற பக்கங்களிலி்ருந்து

பின்னர், யுனைடட் நிறுவனம் தங்களது சிறப்பு பயணச் சீட்டு பயணிகளுக்கான ஆடை கட்டுப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"இந்த சிறப்பு பயணச்சீட்டை பயன்படுத்துபவர்கள் யுனைடட் விமான சேவையின் பிரதிநிதிகளாக கருதப்படுகின்றனர்; மேலும் பல நிறுவனங்களை போல, எங்களுக்கும் ஆடை கட்டுப்பாடு உண்டு; அதை எங்கள் பணியாளர்களும், சிறப்பு பயணச்சீட்டை பயன்படுத்துபவர்களும் கடைபிடிக்க வேண்டும்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் இந்த ஆடை கட்டுப்பாட்டை ஏற்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்