உத்தரப் பிரதேசத்தில் கசாப்பு கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கசாப்பு கடை உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Shilpa Kannan
இந்தியாவின் இந்து தேசியவாத கட்சியான பாஜக, சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச மாநில தேர்தலில் வெற்றிபெற்றது; அதனை தொடர்ந்து சட்டவிரோதமான இறைச்சி கூடங்கள் மற்றும் கசாப்புக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சட்டரீதியாக கடை நடத்துபவர்களையும் அதிகாரிகளோ அல்லது , பசுவதைக்கு எதிரான ஆர்வலர்களோ, துன்புறுத்துவதாக இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த நடவடிக்கையால், நூற்றுக்கணக்கான சிறு கசாப்புக் கடைகள் மற்றும் கோழிக்கறி மற்றும் ஆட்டு இறைச்சியை விற்கும் சாலையோர கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்துக்கள், பசுக்களை புனித விலங்காக கருதுகின்றனர்; மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், பசுக்களை இறைச்சிக்காக கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் எருமைகளின் இறைச்சியை விற்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல கசாப்புக் கடைக்காரர்கள் முஸ்லிம்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












