ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினார்

பட மூலாதாரம், AIADMK
அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அவரது அணியைச் சேர்ந்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தார்.
தனது தலைமையில் ஆட்சியமைக்க உரிமை கோரிய அவர், அதற்குத் தேவையான அளவு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார்.
அவருடன், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி உள்பட 12 பேர் ஆளுநரைச் சந்தித்தார்கள்.

பட மூலாதாரம், AIADMK
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து, முதலமைச்சராகப் பதவியேற்கும் சசிகலாவின் முயற்சிக்குக் தடை ஏற்பட்டது. அதனால், புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராக, சசிகலாவின் நம்பிகைக்குரியவர்களில் ஒருவராகக் கருதப்படும் எடப்பாடி பழனிச்சாமியை எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால், ஆளுநர் மாளிகையில் இருந்து அந்தக் கோரிக்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
கூடுதல் தகவல்களுக்கு:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












