நடிகர் சரத்குமார் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், TWITTER
இதுதொடர்பாக தன்னுடைய கட்சியின் சார்பாக, அதன் நிறுவன தலைவரான ஆர். சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் உழைப்பை நேரில் பார்த்திருப்பதாலும், அவரது திறமையிலுள்ள நம்பிக்கையாலும், சமத்துவ மக்கள் கட்சி சகோதரர்களின் வேண்டுகோளின்படி முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எம்ஜிஆரில் தொடங்கி, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் அதிமுக, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்திருந்தாலும், தற்போது அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கி இருப்பதை நினைத்து முன்னர் வருத்தம் வெளியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் உண்மையாக உழைத்த ஒ.பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதை அறிந்து வேதனையடைந்ததாக ஏற்கெனவே குறிப்பிட்டதையும் சரத்குமார் தனது அறிக்கையில் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு;
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












