ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலிசார் விரட்டியடிக்க முயற்சி
சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில் பெருந்திரளாகக் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டங்களைப் போலிசார் இன்று திங்கட்கிழமை காலை கலைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னையில் இன்று காலையிலிருந்தே போலிசார் ஜல்லிகட்டு ஆதரவாளர்களை விரட்டியடிக்கத் தொடங்கினார்கள்.
பல ஆதரவாளர்கள் கடற்கரையிலிருந்து ஓடிப் போய் கடலை ஒட்டி நிற்பதையும், போலிசார் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முயல்வதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இதனிடையே, போலிசார் நடவடிக்கைக்கு எதிராக சென்னை கடலோர மீனவர் கிராமங்களிலிருந்து மீனவர்கள் திரண்டு ஓடிவருவதை நமது செய்தியாளர் சற்று முன்னர் நடத்திய ஃபேஸ்புக் நேரலையிலிருந்து பார்க்க முடிகிறது.
இது போல கோவை, மதுரை, தஞ்சை, திருச்சி போன்ற நகரங்களிலும் போலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிப்பதைப் பார்க்கமுடிகிறது.








