இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள இரண்டு இடங்களில், தீவிரவாதிகள் மீது இலக்கு வைத்து இந்திய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து இத்தீவிரவாதிகள் எல்லை கடந்து ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடியாக சிவிலியன் விமானங்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள வான்வெளியை பயன்படுத்துவதைத் தடுக்கும் விதமாக அதனை பாகிஸ்தான் மூடியுள்ளது.

இப்பிராந்தியத்தில், முன்னேப்போதும் இல்லாத அளவு இந்தியா தனது ஆயுத கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக, ஐ.நா பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்தியா மீது குற்றம்சாட்டி உரையாற்றிய ஒரு நாளுக்கு பின்னர், பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

18 இந்திய படையினர் இறப்பதற்கு காரணமான, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய ராணுவ தளத்தின் மீது நடந்த தீவிரவாத தாக்குதல், அணு ஆயுத பலம் பொருந்திய இவ்விரு இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையிலான இந்த அண்மைய பதற்றத்தை தூண்டியுள்ளது.