காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்: பெல்லட் குண்டுகளால் மாணவன் சாவு எதிரொலி

kashmir

பட மூலாதாரம், Getty Images

ஸ்ரீநகரில் பெல்லட் குண்டு தாக்குதலால் காயமடைந்த பள்ளி மாணவர் ஒருவரின் இறந்த உடல் கைப்பற்றப்பட்ட பிறகு, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் முழுவதும் கிட்டத்தட்ட முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக மாற்று வழிகள் கடைபிடிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்த பிறகும், பிரிவினைவாத ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அபாயகரமான பெல்லட் குண்டு தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

kashmir

பட மூலாதாரம், Getty Images

அந்த பதின்ம வயது நிரம்பியவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் மீது போலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அங்கு அனைத்து இணையதள சேவைகளையும் அதிகாரிகள் இடைநிறுத்தி உள்ளனர்.

kashmir

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஜூலை மாதம் இந்திய அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்களை தொடர்ந்து கட்டுப்பாடுகள் அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளன என ஸ்ரீநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.