You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெடா என்ற சொல் ஹீப்ரூ மொழியில் தரும் விபரீத பொருள்: கேலிக்குள்ளாகும் ஃபேஸ்புக்
சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை நடத்தும் நிறுவனம் தன் பெயரை 'மெடா' என்று மாற்றிக்கொண்டது.
ஹீப்ரூ மொழியில் 'மெடா' என்றால் இறப்பு என்று பொருள் வருவதால் அதைவைத்து ஃபேஸ்புக் நிறுவனம் சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகிறது.
ஃபேஸ்புக் இறந்துவிட்டது என்று பொருள் தரும் வகையில் #FacebookDead என்கிற ஹேஷ் டேகின் கீழ் பலரும் ட்விட்டர் தளத்தில், பலரும் எழுதுகிறார்கள்.
ஒரு ட்விட்டர் பயனர் "ஹீப்ரூ பேசும் மக்கள் அனைவரும் சிரிக்க ஒரு நல்ல காரணத்தை கொடுத்தமைக்கு நன்றி" என கூறினார்.
ஃபேஸ்புக் மட்டுமே இப்படி பெயர் மாற்ற மொழிபெயர்ப்பு பிரச்சனையால் அனைவரும் பார்த்து சிரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிறுவனமல்ல.
மொழிபெயர்ப்பின் போது பொருள் மாறிய சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் விரல்களை வெட்டி சாப்பிடுங்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த கே எஃப் சி துரித உணவகத்துக்கு 'விரல்களை நக்கி சாப்பிடும் அளவுக்கு சிறப்பானது' என்பது தான் அவர்களின் இலக்கு வாக்கியம். அந்நிறுவனம் சீனாவுக்கு 1980-களில் நுழைந்த போது, தங்களின் இலக்கு வாக்கியத்தை சீனாவில் மொழிபெயர்த்த போது அத்தனை சிறப்பாக பொருந்திப் போகவில்லை.
மாண்டரின் மொழியில் "உங்கள் விரல்களை வெட்டி சாப்பிடுங்கள்" என்று பொருள்படும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
ஆனால் அந்த வாசகங்கள் கே எஃப் சி நிறுவனத்தை அதிகம் பாதிக்கவில்லை. இப்போதும் சீனாவின் மிகப்பெரிய துரித உணவகங்களில் ஒன்றாக உள்ளது கே எஃப் சி.
உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், தன் 'சில்வர் மிஸ்ட்' காரின் பெயரை 'மிஸ்ட்' என மாற்றியது. அதை ஜெர்மனில் மொழிபெயர்த்தால் 'சாணம்' அல்லது 'மலம்' என பொருள்பட்டது. பிறகு காருக்கு சில்வர் ஷேடோவ் என்று பெயர் மாற்றப்பட்டது.
நோக்கியா நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு லூமியா மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியபோது, அது எதிர்பார்த்த அளவுக்கு எதிர்வினைகள் வரவில்லை.
ஸ்பானிய மொழியில் லூமியா என்றால் 'விபச்சாரம் செய்பவர்' என்று பொருள். நாடோடியாக வாழும் மக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் மொழி வழக்குகளில் மட்டுமே இப்படி பொருள்படும்.
ஹோண்டா நிறுவனம் தன் புதிய கார் ஒன்றுக்கு ஃபிட்டா என்று பெயரிட இருந்தது. ஸ்வீடிஷ் மொழியில் ஃபிட்டா என்றால் யோனிக் குழலை குறிக்கும் கொச்சையான சொல்.
இந்த பிரச்சனை தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த ரக வாகனத்துக்கு ஜாஸ் என பல நாடுகளில் பெயரிடப்பட்டது.
பிற செய்திகள்:
- அமெரிக்க பூர்வகுடி தலைவரின் தலைமுடியை வைத்து கொள்ளுப் பேரனை உறுதி செய்த விஞ்ஞானிகள்
- ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுதலை: போதை வழக்கில் கைதானவர்
- தமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்க களம் இறங்கியுள்ள ராமநாதபுரம் சிறார்கள்
- பாமாயில் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது எப்படி?
- “பணக்கார நாடுகள் தங்களின் தடுப்பூசி மருந்தை ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” இந்தோனீசிய அதிபர்
- ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ரகசியப் போர் தொடுக்கும் தாலிபன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்