செப்டம்பர் 11 அச்சம்: அருகருகே விமானங்கள் வந்ததால் பீதியடைந்த பொதுமக்கள்

விமானங்கள்

பட மூலாதாரம், AFP

பிரெஞ்சு தலைநகர் பாரிஸ் அருகே ஓர் ஏர்பஸ் ஏ 330 விமானத்துக்கு அருகே பிரான்ஸ் படை விமானம் ஒன்று சென்றதால் அதைக் கண்டவர்கள் அச்சமடைந்தனர்.

"இது ஒரு குண்டுவெடிப்பு போல் தோன்றியது - அது விபத்துக்குள்ளானதா என்பது எங்களுக்குத் தெரியாது" என்று அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் BFM TV இடம் கூறினார். "அமெரிக்காவின் 9/11 தாக்குதலின் 20 வது ஆண்டு விழா என்பதால் நாங்கள் அப்படி யோசிக்கிறோம்: என்றும் அவர் கூறினார்.

உண்மையில், ஏர்பஸ் விமானம் ஒரு பயிற்சியில் ஈடுபட்டது. அதில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இருந்தார்.

ரஃபேல் போர் விமானம் எரிபொருள் நிரப்பும் பயிற்சியை மேற்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைப் படம்பிடித்தவர்கள் இதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். "இது முட்டாள்தனம்" என்றும் கவலை தெரிவித்திருந்தனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகள்" காரணமாக அவர் ஏர்பஸ் விமானத்தில் சென்றதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமருடன் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியும் விமானத்தில் இருந்தார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இந்த ராணுவ விமானம் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது.

இரண்டு விமானங்களும் பாரிஸின் தென்மேற்கில் உள்ள ஒரு விமான தளத்தில் 9/11 நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றபோது சனிக்கிழமை பிற்பகலில் தரையிறங்கின

"இறுதியில், இது ஒரு பயிற்சி மட்டுமே. நேரம் பொருந்திப் போனால், மக்கள் தங்கள் விருப்பப்படி நினைப்பார்கள்" என்று BFM TV கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :