You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெனுஞ்சைத்திஸ் நோய் பரவல்: ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் 120 பேர் பலி
- எழுதியவர், ரோடா ஒதியாம்போ
- பதவி, பிபிசி சுகாதார செய்தியாளர், நைரோபி
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் மெனுஞ்சைத்திஸ் (meningitis) நோய் கொள்ளை நோயாகப் பரவுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த நோயால் 120-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
காங்கோ ஜனநாயக குடியரசில் இந்த நோய்த் தொற்று முதல் முறையாக ஜூலை மாதம் கண்டறியப்பட்டது. இப்போது 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் மெனுஞ்சைத்திஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மிகப் பெரிய கொள்ளை நோயை உருவாக்க வல்லது
சூனியம் வைப்பதால் இந்த நோய் ஏற்படுவதாக சமுதாயத்தில் ஒரு நம்பிக்கை நிலவுவதால், இந்த நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது கடினம் என்று பிபிசியிடம் தெரிவித்தது உலக சுகாதார நிறுவனம்.
நோய் பாதித்தவர்கள் உடலில் இருந்து எடுத்த மாதிரிகள் பிரான்சுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டன. அதில், இந்த நோய்க்கு காரணமான பாக்டீரியம் மிகப் பெரிய கொள்ளை நோயை உருவாக்க வல்லது என்று கண்டறியப்பட்டது.
தற்போது பலர் இந்த நோயால் இறந்துள்ளனர். சமுதாயம் உரிய முறையில் எதிர்வினையாற்றாதது இந்த நோயில் மரண விகிதம் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது.
நோய்த் தொற்றிய பலர் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு பதில் ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்துக்கு இடம் பெயர்கின்றனர். இப்படி பயணம் செய்யும்போது இந்த நோய் தங்களைப் பின் தொடர்ந்து வராது என்று அவர்கள் நம்புகின்றனர்.
காங்கோ ஜ.கு. அரசாங்கமும், உலக சுகாதார நிறுவனமும், இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக, வட கிழக்கில் உள்ள ஷோபோ மாகாணத்துக்கு ஒரு குழுவை அனுப்பிவைத்துள்ளன.
செனகலில் இருந்து எத்தியோப்பியா வரையில் செல்லும் 'ஆப்பிரிக்காவின் மெனுஞ்சைத்திஸ் பெல்ட்' என்று அழைக்கப்படும் ஒரு பிராந்தியத்தில் இந்த ஷோபோ மாகாணமும் இடம் பெற்றுள்ளது. இந்த மெனுஞ்சைத்திஸ் பெல்ட் பிராந்தியத்தில் 26 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இதில் சில பகுதிகள் மீண்டும் மீண்டும் இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறவை. குறிப்பாக ஜனவரி முதல் ஜூலை வரையிலான உலர்வான பருவத்தில் இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது.
சுவாச, தொண்டை சுரப்புகள் தெறிப்பதால்...
தொற்றியவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தவல்ல இந்த நோய், தொற்றிய ஒருவரிடம் இருந்து அவரது சுவாச, தொண்டை சுரப்புள் தெறிப்பதன் மூலம் பரவுகிறது இந்நோய்.
பிற செய்திகள்:
- பருமனான பெண்களுக்கு ப்ரா தயாரிப்பதில் புரட்சி செய்யும் பெண்
- செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்காவின் 'இதயத்தை' காயப்படுத்திய பயங்கரவாதிகள்
- இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கையில் உணவுப் பஞ்சமா - உண்மை என்ன?
- கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வழக்கு: திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பின் வரலாறு
- ஆப்கானிஸ்தானில் தாலிபனின் இடைக்கால அமைச்சரவை - யாருக்கு என்ன பொறுப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்