You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவின் நிலவு திட்டத்துக்கு மூளையாக விளங்கும் 24 வயது பெண் கமாண்டர்
ஸூ செங்க்யூ (Zho Chengyu) தான், சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த 24 வயது இளம் பெண் விண்வெளி கமாண்டர்.
சீனாவின் அரசு ஊடகம், சாங்கே-5 விண்வெளித் திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தவர்களில் ஒருவராக ஸூ-வையும் குறிப்பிட்டதால், சீனாவின் வெய்போ சமூக வலைதளத்தில் ஸூ பயங்கர டிரெண்டிங்கில் இருக்கிறார்.
சாங்கே-5 திட்டத்தில் இவர் செய்த அசாத்தியமான வேலைகளால் இவர் வைரலாகிக் கொண்டு இருக்கிறார். சீனாவின் சாங்கே-5 என்பது நிலவை ஆராய்ச்சி செய்யும் திட்டம்.
வென்சங் விண்வெளி ஏவுதளத்தில், ஸூ செங்க்யூவை அனைவரும் மரியாதையோடு "பெரிய சகோதரி" என்று தான் அழைக்கிறார்கள்.
ஸூ தான் ராக்கெட் கனெக்டர் சிஸ்டம் என்கிற முக்கியமான வேலையைப் பார்த்துக் கொண்டார்.
சீன மக்கள் ஸூ-வின் அறிவுத் திறனைப் பாராட்டிக் கொண்டாடுகிறார்கள். அதோடு, ஸூ-வை சீனாவின் பெருமிதம் எனவும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வெய்போ பயனர்கள்.
டுகாய் குய்சோ நெட் (Duocai Guizhou Net) என்கிற செய்தி வலைதளம், பலமுறை ஸூ-வை நேர்காணல் செய்ய அனுமதி கோரியது. தொடர்ந்து மறுத்திருக்கிறார் ஸூ. தன் வேலையில், புகழ் குறுக்கிட்டு விடக்கூடாது என ஸூ விரும்புவதாக டுகாய் செய்தி வலைதளம் குறிப்பிட்டு இருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில், சாங்கே-5, நிலவில் தரையிரங்கும் சீனாவின் மூன்றாவது வெற்றிகரமான திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில், சந்திரப் பெண் கடவுளை சாங்கே என்பார்கள். ஆகையால் தான், சீனா தன் நிலவு ஆராய்ச்சித் திட்டத்துக்கு சாங்கே-5 எனப் பெயரிட்டிருக்கிறது.
நிலவில் இருந்து பாறைகள் மற்றும் மண்ணை சேகரித்துக் கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதனால் நிலவு தோன்றியது குறித்து, விஞ்ஞானிகள் கூடுதலாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
சாங்கே-5 வெற்றிகரமாக நிலவில் பாறைகள் மற்றும் மண்ணை எல்லாம் சேகரித்து, சீன நாட்டுக் கொடியை எல்லாம் நாட்டிவிட்டு, நிலவை விட்டுக் கிளம்பிவிட்டது. இன்னும் சில நாட்களில் பூமியை வந்தடையும்.
இந்த திட்டம் சரியாக நடந்துவிட்டால், கடந்த 40 ஆண்டுகளில் சந்திரனில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வந்த திட்டமாக வரலாற்றில் தன் இடத்தைப் பிடிக்கும் சாங்கே-5. அதோடு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு, நிலவின் மாதிரிகளைச் சேகரித்த மூன்றாவது நாடாக சீனா சாதனை படைக்கும்.
விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தை, தன் நாட்டின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வெளிக்காட்டும் ஒரு விஷயமாகப் பார்க்கிறது சீனா. அதோடு தன் திறமையை உலக அரங்கில் பறைசாற்றும் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கிறது சீனா.
சந்திரனில் சோதனைகளை நடத்துவது ஒரு நாட்டின் முழுமையான பலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும் என, கடந்த 2006-ம் ஆண்டு, சீனாவின் அரசு ஊடகமான பீப்பிள்ஸ் டெய்லியிடம் கூறியிருந்தார் பேராசிரியர் ஓயங் சியுயன் (Ouyang Ziyuan).
கடந்த ஆண்டில், பூமியில் இருந்து காண முடியாத நிலவின் மறுபக்கத்தில், இயந்திர விண்கலத்தை ஏவிய முதல் நாடாக உருவெடுத்தது சீனா. அடுத்த சில தசாப்தங்களில், நிலவின் ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் திட்டங்களை தீட்டிக் கொண்டு இருக்கிறது சீனா.
தன் நாட்டில் இருக்கும் வலுவான சாதனைப் பெண்களை முன்னிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது சீனா.
சீன அரசின் உயர் அதிகாரிகள் பெரும்பாலும் ஆண்களாக் இருக்கிறார்கள். அரச பதவிகள் ஆண்களால் நிறைந்து இருக்கிறது.
சீனாவில் பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைவாகவே இருப்பதாக, சீன மக்கள் கருதுகிறார்கள்.
கடந்த நவம்பர் மாதத்தில், மருத்துவ விஞ்ஞானியான சென் வெய் (Chen Wei), வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூ சுன்யிங் (Hua Chunying), யு.எஃப்.சி போட்டியாளரான சாங் வெய்லி (Zhang Weili) போன்ற பெண்களின் சாதனைகளைக் குறித்து கருத்து தெரிவிக்குமாறு, சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை, இணையவாசிகளுக்கு அழைப்புவிடுத்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- மதுரை மூதாட்டியின் புகாரை வீடுவரை சென்று தீர்த்த மாவட்ட ஆட்சியர்
- ரஜினி கட்சி: ரூ.10 ஆயிரம், 100 உறுப்பினர்கள் இருந்தால் நீங்களும் கட்சி தொடங்கலாம்?
- ஜோ பைடன் வெற்றி தேர்தல் சபையில் உறுதி: டிரம்ப் இனி அவ்வளவு தானா?
- கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய வேறு நாட்டிடம் உதவி கோரும் இலங்கை
- சித்ரா மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
- விண்வெளியில் 'பாங்கு' சொல்லும் ஒலி: நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்