You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷின்சோ அபே: ஜப்பான் பிரதமர் பதவி விலகல் - என்ன பிரச்சனை?
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல பிரச்சனைகள் காரணமாக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை பதவியில் தொடருவதாக அவர் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக பெருங்குடல் அழற்சி (Ulcerative colitis)நோயால் அவதிப்பட்டு வரும் அவரது உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
65 வயதாகும் பிரதமர் ஷின்சோ அபே தனது உடல்நலனால் அரசுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க விரும்புவதாக ஜப்பானின் அரச ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஜப்பானின் பிரதமராக பதவியேற்ற ஷின்சோ அபே, நாட்டின் வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை இந்த வாரத்தின் தொடக்கத்தில் பெற்றிருந்தார்.
தனது இளம்வயதிலிருந்து பெருங்குடல் அழற்சியுடன் போராடி வரும் ஷின்சோ அபே, கடந்த 2007ஆம் ஆண்டு இதே காரணத்தினால் பதவியிலிருந்து விலக நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர பழமைவாத மற்றும் தேசியவாதியாக அறியப்படும் அபே, தனது தனித்துவமான "அபெனோமிக்ஸ்" என்ற அழைக்கப்படும் ஆக்கிரோஷமான பொருளாதாரக் கொள்கையுடன் வளர்ச்சியைத் தூண்டுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்.
ஜப்பானின் பாதுகாப்புப்படைகளை வலுப்படுத்தியுள்ள இவர் இராணுவ செலவினங்களுக்கான நிதியை அதிகரித்துள்ளார். ஆனால் தற்காப்பு தவிர வேறு எதற்கும் இராணுவத்தை பயன்படுத்துவதை தடை செய்யும் அரசமைப்பின் பிரிவு 9ஐ திருத்தும் நோக்கம் நிறைவேறவில்லை.
ஒருவேளை ஷின்சோ அபே பதவி விலகினால், ஜப்பானின் சட்டத்தின்படி, அந்த நாட்டின் இடைக்கால பிரதமராக ஒருவர் பதவி ஏற்பார். இதற்கான களத்தில், நிதியமைச்சராக இருக்கும் துணைப் பிரதமர் டாரோ அசோ மற்றும் அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா ஆகியோர் உள்ளனர்.
பிற செய்திகள்:
- டெல்லி கலவரத்தில் போலீஸின் பங்கு என்ன? - ஆதாரங்களுடன் அம்னெஸ்டி அறிக்கை
- 100 ஏக்கர் நிலம்; 25 ஆண்டுகள் உழைப்பு - தமிழகத்தில் தனி மனிதர் உருவாக்கிய செழிப்பான காடு
- அரியர் பாடங்களில் தேர்ச்சி அறிவிப்பு: 'தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' - எழும் எதிர்ப்புகள்
- NEET-JEE தேர்வுகளை தள்ளிவைக்க மோதி அரசு தயங்குவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: