You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மியா கலிஃபா: முன்னாள் ஆபாச பட நடிகையின் மூக்கு கண்ணாடி எவ்வளவு ஏலத்தை எட்டியது?
லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகத் தனது அடையாளங்களில் ஒன்றான மூக்கு கண்ணாடியை ஆபாச பட முன்னாள் நடிகை மியா கலிஃபா ஏலம் விட்டுள்ளார்.
லெபனான் வெடிப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர், அதில் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இந்த வெடிப்புச்சம்பவம், அந்நாட்டு பொருளதாரத்திலும், அரசியல் சூழலிலும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் காணொளி வாயிலாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், லெபானனில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
லெபனானில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததை அடுத்து அந்த நாட்டில் பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையிலான அரசு ஆகஸ்ட் 10ஆம் தேதி கூண்டோடு பதவி விலகியது.
மியா கலிஃபா
ஆபாசப்பட துறையின் முன்னாள் நடிகை மியா கலிஃபா லெபனான் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான தகவல்களை, தொடர்ந்து தமது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மியா கலிஃபா பகிர்ந்து வந்தார்.
வெடிச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக e-bay தளத்தில் தனது அடையாளங்களில் ஒன்றான மூக்கு கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார்.
தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. "என் நாட்டிற்காக எது வேண்டுமானாலும்?" என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.
All photos subject to copyright.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்:
- கனிமொழி இந்தி சர்ச்சை: "நான் இதுவரை யாருடைய பேச்சையும் மொழிபெயர்த்தது கிடையாது"
- இலங்கை அமைச்சரவை: ராஜபக்ஷ குடும்பத்தினர் 5 பேருக்கு அமைச்சர் பதவி
- அ.தி.மு.கவில் முதல்வர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்படுவது ஏன்?
- கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் பி.ஆர். பழனிச்சாமியை விடுவித்த உத்தரவு ரத்து
- பெங்களூரு வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
- கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண் - யார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :