You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரான்ஸ்: உருகும் பனிப்பாறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 1966ஆம் ஆண்டின் இந்திய செய்தித்தாள்
பிரான்ஸில் உள்ள உருகும் பனிப்பாறை ஒன்றிலிருந்து 1966ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய செய்தித்தாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தித்தாள் 1966ஆம் ஆண்டு 117 பேரை பலிவாங்கிய விமான விபத்தின் மூலம் அங்கு வந்து சேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
தேர்தல் வெற்றி
அந்த செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றிப் குறித்த செய்தி இடம் பிடித்துள்ளது.
அங்குள்ள உணவக உரிமையாளர் ஒருவரால் நேஷனல் ஹெரால்ட், எகனாமிக்ஸ் டைம்ஸ் உட்பட டஜன் கணக்கான செய்தித்தாள்கள் கண்டறியப்பட்டன.
டிமோதி மோடின் என்னும் அந்த உணவக உரிமையாளர், அந்த "செய்தித்தாள்கள் உலர்ந்து வருகின்றன" என்று தெரிவித்தார்.
இந்த செய்தித்தாள்கள் உலர்ந்தபின் உணவகத்தில் காட்சிக்காக வைக்கப்படும் என தெரிவித்தார் மோடின்.
வெப்பமயமாதல்
அந்த பனி மலையில் விமான விபத்தில் எஞ்சிய பொருட்களை அவர் சேகரித்து வருகிறார்.
அதில் 2013ஆம் ஆண்டு விலை மதிக்கத்தக்கப் பல பொருட்கள் அவருக்கு கிடைத்தன. மரகதங்கள், மாணிக்கம் மற்றும் ரூபி கற்கள் அவருக்கு கிடைத்திருக்கின்றன.
உலகம் வெப்பமயமாததால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மோன் பிளாக் என்று அழைக்கப்படும் பனிப்பாறையின் ஒரு பகுதி உருகப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மோன் பிளாக் மலைத்தொடர், ஐரோப்பாவின் மேற்கத்திய பகுதியில் உள்ள மிக உயரமான மலைத்தொடராகும்.
1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'ஏர் இந்தியா 101' விமானம் அப்போது பாம்பே என்று அழைக்கப்பட்ட மும்பையிலிருந்து லண்டன் சென்று கொண்டிருந்தபோது மோன் பிளாக்கில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
அந்த விமான லெபனான் தலைநகர் பீய்ரட் மற்றும் சுவிட்சர்லாந்தில் ஜெனிவாவில் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஜெனிவாவில் தரையிறங்கும்போது விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில், விமானத்தில் இருந்த 106 பயணிகள் மற்றும் 11 விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
- அரபு தேசத்தின் முதல் விண்வெளி பயணம்: ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் செல்வது ஏன்?
- அமெரிக்கா - சீனா - பிரிட்டன்: பூகோள அரசியலில் சிக்கிக்கொண்ட ஹுவாவே நிறுவனம்
- "ராமர் எங்கள் நாட்டில்தான் பிறந்தார், அயோத்தியும் இங்குதான் உள்ளது" : நேபாள பிரதமர்
- புற்றுநோய் அணுக்களை அழிக்கப் பயன்படும் மஞ்சள் - சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: