You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்ய அணு உலையிலிருந்து ஐரோப்பாவுக்கு அணு கதிர் வீச்சு பரவுகிறதா? - மற்றும் பிற செய்திகள்
ரஷ்யாவில் இருக்கும் அணு உலை ஒன்றிலிருந்து ஐரோப்பா ஸ்கேண்டினேவியன் நாடுகளுக்கு அணு கதிர் வீச்சு பரவுகிறது என்ற குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
பின்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் உள்ள அணு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் வழக்கத்தைவிட அதிகமான கதிரியக்கம் வளிமண்டலத்தில் பரவி உள்ளதாக கூறியது. இந்த கதிரியக்கமானது மேற்கு ரஷ்யாவிலிருந்து வந்ததாக டச்சு சுகாதார அமைப்பு கூறியது. ஏதேனும் அணு உலையில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியது. ஆனால், இதனை ரஷ்யா மறுத்துள்ளது. மேற்கு ரஷ்யாவில் உள்ள இரண்டு அணு உலைகளும் வழக்கம் போல இயங்குவதாக, சிறு கசிவு கூட அங்கு ஏற்படவில்லை என அந்நாடு கூறி உள்ளது.
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தென்காசி ஆட்டோ டிரைவர் மரணம்
சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரணத்தைத் தொடர்ந்து தென்காசியில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் போலீஸ் சித்ரவதையால் நிகழ்ந்தது என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
விரிவாகப் படிக்க:போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் மரணம்
கொரோனா தொற்று உலகில் 1 கோடியைத் தாண்டியது: இறந்தோர் எண்ணிக்கை 5 லட்சம்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வைரஸால் இறந்தவர்கள் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 5 லட்சத்தை எட்டியுள்ளது.
188 நாடுகளில் பரவியுள்ள இந்த உலகத் தொற்று சீனாவில் தொடங்கியிருந்தாலும், இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் 25 லட்சம் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கைதிகளை தாக்கக்கூடாது: போலீசாருக்கு சென்னை ஆணையர் அறிவுரை
காவல்நிலையத்திற்கு கைது செய்து அழைத்துவருபவர்களை அடிப்பதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு என்றும் யாருடைய மனதை துன்புறுத்தக்கூடாது என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
விரிவாகப் படிக்க: கைதிகளை தாக்கக்கூடாது: போலீசாருக்கு சென்னை ஆணையர் அறிவுரை
புவி வெப்பமயமாதல்: அதிகம் மரம் நடுவதே பூமிக்கு ஆபத்து என்று கூறும் ஓர் ஆய்வு
சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில், அதிக அளவில் மரம் நடுவது, பூமிக்கு நன்மையைவிட தீங்கே விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மரம் நடுவதற்காக கொடுக்கப்படும் நிதிச்சலுகைகளால் ஏற்படும் எதிர்வினை, பூமியின் பல்லுயிர் சூழலை குறைக்கும் என்றும், இவ்வாறு மரம் நடுவதால், கரியமில வாயு வெளியேற்றத்தை சமாளிப்பதில் மிகக்குறைந்த தாக்கமே இருக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: