எலான் மஸ்க் குழந்தைக்கு X Æ A-12 என்ற பெயர் ஏன்? - ட்விட்டரில் விளக்கம் மற்றும் பிற செய்திகள்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தனக்கும் தனது பெண் தோழிக்கும் பிறந்த குழந்தைக்கு X Æ A-12 என பெயர் சூட்டியுள்ளார்.

எலான் மஸ்க் மற்றும் பாடகியான கிரைம்ஸுக்கு திங்களன்று குழந்தை பிறந்திருப்பதாக மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் குழந்தைக்கு X Æ A-12 என்று பெயர் வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பெயர் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது. மேலும் இதை எப்படி அழைப்பது என்றும் பலர் கேள்வி கேட்டுள்ளனர்.

ட்விட்டரில் பொதுவாக நகைச்சுவையாக பதிவிடும் வழக்கம் கொண்ட எலான் மஸ்க், இதுகுறித்தும் நகைச்சுவை செய்கிறார் என்றே பலரும் நினைத்தனர்.

ஆனால் பின்னர் பாடகி கிரைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் பெயருக்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆங்கிலத்தில் a மற்றும் e-யின் கலவையே Æ. இதனை 'ash' என்றும் கூறுவர் இது லத்தீன் மொழியில் உள்ளது. இருப்பினும் டென்மார்க் நார்வே மற்றும் ஐஸ்லாந்தில் இது எழுத்தாகவும் கருதப்படுகிறது.

A-12 என்பது சி.ஐ.ஏ-வுக்காக வடிவமைக்கப்பட்ட போர் விமானத்தின் பெயர். இருப்பினும் இது அனைத்தையும் எவ்வாறு உச்சரிப்பது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.

மேலும் இந்த பெயரை எலன் மஸ்க் வாழும் கலிஃபோர்னியாவில் பதிவு செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. அங்கு சாதரண எழுத்துகளை கொண்ட பெயர்களையே பதிவு செய்திட முடியும்.

அதிர்ச்சியில் தமிழகம்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 324 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சுட்டுக் கொலை

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் முக்கியத் தீவிரவாத தலைவர் ஒருவரும் அவரது கூட்டாளி ஒருவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

9 ஆண்டுகளுக்கு பின்னர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழர் பிரச்சினை தொடர்பில் சுமார் 9 வருடங்களுக்குப் பின்னர் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளது.

மீண்டும் திறக்கப்பட்ட முடிதிருத்தும் நிலையங்கள்

காத்திருப்புக்கான பகுதி கிடையாது, பத்திரிகைகள் கிடையாது, நுனிகளை மட்டும் சீர் செய்வதற்கான கட்டிங் கிடையாது, வாடிக்கையாளருக்கும், முடி திருத்துபவருக்கும் முகக்கவசம் கட்டாயம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: