You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் பாதிப்புகளை சரி செய்ய அமெரிக்கா செலவிடும் பெருந்தொகை மற்றும் பிற செய்திகள்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உண்டாகியுள்ள பொருளாதார இழப்புகளை சரிசெய்ய 484 பில்லியன் (48,400 கோடி) அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணத் தொகுப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ், வியாழன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இது அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள, கோவிட்-19 உண்டாக்கிய பொருளாதார பாதிப்புகளுக்கு உதவிகள் வழங்கும் நான்காவது நிதி மசோதாவாகும்.
கடந்த மாதம் அமெரிக்க வரலாற்றிலேயே அதிகபட்சமாக இரண்டு டிரில்லியன் (இரண்டு லட்சம் கோடி) டாலர் மதிப்பிலான பொருளாதார உதவி நிதித் தொகுப்புக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது.
இதுவரை சுமார் 3 டிரில்லியன் டாலர் (3 லட்சம் கோடி) அளவுக்கு நிவாரண உதவிகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது அமெரிக்க அரசின் நிதிப் பற்றாக்குறையை வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கச் செய்யும்.
கபசுர குடிநீர் - தமிழக அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
விரிவாகப் படிக்க: கபசுர குடிநீர் வழங்கும் தமிழக அரசு - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டுமே என விளக்கம்
காணாமல் போன பத்திரிகையாளர் - புதிய காணொளி
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார்.
விரிவாகப் படிக்க: வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளர் - புதிய காணொளி வெளியீடு
மலையகத்தின் பறிக்க முடியாத பூக்கள்
இலங்கையின் மலையக பகுதிகளில் இயற்கை வளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் பகுதி என வர்ணிக்கப்படுகின்ற மலையகத்திலேயே தேயிலை, ரப்பர், மரக்கறி உள்ளிட்ட செய்கைகள் செய்யப்படுகின்றன.
விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ்: இலங்கை மலையகத்தின் பறிக்க முடியாத பூக்கள்
இந்தியாவில் நடந்த முதல் உயிரிழப்பின் பின்னணியில் உள்ள சர்ச்சை
அது பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள். சௌதி அரேபியாவின் ஜெட்டாவில், பல் மருத்துவராக பணியாற்றும் தனது இளைய மகனின் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்துவிட்டு, அன்றுதான் இந்தியா திரும்பியிருந்தார் சித்திக்கி.
விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ்: இந்தியாவில் நடந்த முதல் உயிரிழப்பின் பின்னணியில் உள்ள சர்ச்சைகள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: