You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம் - என்ன நடக்க இருக்கிறது? மற்றும் பிற செய்திகள்
ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம்
உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்க, இதையெல்லாம் சமாளித்துவிடலாம் எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். பணியிடங்களில் மனித ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ரோபோக்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து பல புத்தகம் எழுதி இருக்கும் மார்ட்டின் ஃபோர்ட், உரையாட சக மனிதன் தேவை என்ற நிலையை கொரோனா மாற்றி இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். கொரோனா காரணமாக இப்போதே பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்தத் தொடங்கிவிட்டன. வால்மார்ட் தரைகளைச் சுத்தப்படுத்தவும், தென் கொரியா கைகளை சுத்திகரிக்க சேனிடைசர் வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.
2021ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த சமயத்தில் பல இடங்களில் ரோப்போக்களின் பயன்பாடு அதிகமாகும், இது எதிர்காலத்தில் பெரும் சவாலாகவும், பேரபாயமாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.
கொரோனா வைரஸ்: தமிழகம் வாங்கிய 'ரேபிட் டெஸ்ட் கிட்'டின் விலை அதிகமாக இருப்பது ஏன்?
கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பதைத் துரிதமாகக் கண்டறிய உதவும் 'ரேபிட் டெஸ்ட் கிட்'கள் தமிழகத்தை வந்தடைந்திருக்கும் நிலையில், அவற்றின் விலை அதிகமாக இருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் 'ரேபிட் டெஸ்ட் கிட்கள்' இன்று தமிழகத்தை வந்தடைந்துள்ளன. தமிழ்நாடு சுகாதாரத் துறை ஆர்டர் செய்த 5,00,000 கிட்களில் 24,000 கிட்களும் மத்திய அரசுக்கு வந்த கிட்களில் 12 ஆயிரம் கிட்களும் தமிழகத்தை வந்தடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு: ஒரு மாதத்தின் பின்னர் முடக்க நிலையை தளர்த்தும் இலங்கை
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் ஒரு மாத காலமாக அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலைமையை பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 20ம் தேதி முதல் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
விரிவாகப் படிக்க:ஒரு மாதத்தின் பின்னர் முடக்க நிலையை தளர்த்தும் இலங்கை
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
கொரோனா ஊரடங்கால் டாஸ்மாக் மூடல் - இணையத்தை பார்த்து மது தயாரிக்க முயன்றவர்கள் கைது
இணையதளத்தில் காணொளியைப் பார்த்து வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க முற்பட்ட இருவர் தமிழக காவல் துறையால் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர் என பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. பல நாட்கள் ஆகும் இந்த மது தயாரிக்கும் முறையை அவர்கள் முடிக்கும் முன்னரே போலீஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் இருவரும் மது தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
விரிவாகப் படிக்க:டாஸ்மாக் மூடல்- இணையத்தை பார்த்து மது தயாரிக்க முயன்றவர்கள் கைது
தமிழ்நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
தமிழகத்தில் புதிதாக 49 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் 82 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது என்றும் விரைவாக சோதனைகளை மேற்கொள்ள 'ரேபிட் டெஸ்ட் கிட்களை' தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: