You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் நிறுவனத்தில் பொருள் வாங்குபவரா நீங்கள்? - இக்கட்டுரை உங்களுக்கானது மற்றும் பிற செய்திகள்
அமேசானில் பொருள் வாங்குபவரா நீங்கள்?
கொரோனா காரணத்தினால் அமேசான் தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஒரு பக்கம் அரசாங்கம் மக்களை தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் போது, அமேசான் நிறுவனம் பிரிட்டனில் உள்ள தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கூறி உள்ளது.
மக்கள் கடைகளுக்குச் செல்ல அச்சப்பட்டு பெரும்பாலான பொருட்களை இணையத்தில் வாங்குவதுதான் இதற்கு காரணம். பாதுகாப்பை விட லாபம்தான் அமேசான் நிறுவனத்துக்கு முதன்மையாக இருக்கிறது எனத் தொழில் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. பிரிட்டனில் மட்டும் அமேசான் நிறுவனத்தில் 27,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அமேசான் நிறுவனம் பிரிட்டனில் அதிகநேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு இரண்டு பவுண்டுகள் வழங்குவதாகக் கூறி உள்ளது.
கொரோனா வைரஸ்: சர்வதேச விமான சேவைகளை நிறுத்தியது கோ ஏர் விமான நிறுவனம்
கொரோனா வைரஸ் பரவல் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 'கோ ஏர்' விமான சேவை நிறுவனம் தனது சர்வதேச விமான சேவையை மார்ச் 17 முதல் ஏப்ரல் 15 வரை முற்றிலும் நிறுத்திவைத்துள்ளது.பல நாடுகளும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்குத் தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணங்கள் உலகம் முழுவதும் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகிறது.
கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை - மருத்துவர்கள் கதறல்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான சூழலில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
விரிவாகப் படிக்க:கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை - மருத்துவர்கள் கதறல்
இரும்பு மழையாகப் பெய்யும் ஒரு புதிய கோள் - விண்வெளி அதிசயம்
"புத்தம் புது பூமி வேண்டும், நித்தம் ஒரு வானம் வேண்டும்... தங்க மழை பெய்ய வேண்டும்" என்று ஒரு சினிமா பாடலை நீங்கள் கேட்டிருக்கலாம். அப்படி ஒரு புத்தம் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் தங்க மழை எல்லாம் இல்லை. ஆனால், இரும்பு மழை பெய்கிறது என்பதை விண்வெளி வீரர்கள் வியந்து பார்த்திருக்கிறார்கள். இது ஹாலிவுட் திரைப்படம் அல்ல. நமக்கு தெரியாமல் தீவிரமாக செயல்படும் மற்றொரு உலகில் நடைபெறும் இயற்கை நிகழ்வு இது.
விரிவாகப் படிக்க:இரும்பு மழையாகப் பெய்யும் ஒரு புதிய கோள் - விண்வெளி அதிசயம்
கிரெடிட், டெபிட் கார்ட் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு இன்று முதல் கட்டுப்பாடு
இதுவரை வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் ஆகியவற்றை வாங்கியவுடன் வாடிக்கையாளர்களால் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ஆனால் இனி புதிதாக வழங்கப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்து உடனடியாக ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது. இந்திய ரிசர்வ் வங்கி வகுத்த புதிய விதியின்படி 2020 மார்ச் 16 முதல் வழங்கப்படும் அனைத்து அட்டைகளும் ஆன்லைன் பரிவர்த்தனை வசதி முடக்கப்பட்டே வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: