You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸுக்கு வைரஸ் பாதிப்பு; ரசிகர்கள் சோகம்
தானும், தனது மனைவி ரீடா வில்ஸனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
63 வயதான ஹேங்க்ஸ் ஆஸ்கர் விருது பெற்றவர்.
தனக்கும், வில்சனுக்கும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், மருத்துவரின் உதவியை நாடியதாக கூறுகிறார்.
எனவே இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹேங்க்ஸ் படப்பிடிப்பிற்காக கோல்ட் கோஸ்டில் தங்கியிருந்ததாகக் கூறுகிறார்.
மேலும், நோய்த் தொற்று குறித்து தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கத்தில் தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
வார்னர் ப்ரோஸ் தயாரிப்பில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த டாம் ஹேங்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த திரைப்படத்தில் வேலைப் பார்த்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா என்ற அச்சம் நிலவுகிறது.
''எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியுரியும் ஊழியர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்புக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்போம். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்று மட்டுமே வார்னர் ப்ரோஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தாக்கிய முதல் ஹாலிவுட் பிரபலமாக டாம் ஹேங்ஸ் அறியப்படுகிறார்.
ஆனால், திரைப்பட படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு கொரோனாவை உலகம் முழுவதும் பரவும் தொற்றாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க நாட்டை சேர்ந்த டாமும் ரீட்டாவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இதுவரை 1,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் பலியாகி உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: