சௌதி அரேபிய அரச குடும்பத்தை சேர்ந்த மூவர் திடீர் கைது மற்றும் பிற செய்திகள்

முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

சௌதி அரேபிய அரச குடும்பத்தின் மூன்று மூத்த உறுப்பினர்கள் காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் சௌதி அரசரின் சகோதரரும் அடக்கம். இவர்களில் இருவர் சௌதி அரேபியாவில் மிகவும் செல்வாக்கு நிறைந்தவர்களாக விளங்குபவர்கள்.

News image

இந்த கைது நடவடிக்கைக்கும் சௌதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போன்று, கடந்த 2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் சௌதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ரியாத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சௌதி அரேபியாவின் இளவரசராக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது முதல் அந்நாட்டின் அறிவிக்கப்படாத ஆட்சியாளர் போன்று முகமது பின் சல்மான் விளங்கி வருகிறார்.

இந்த கைது நடவடிக்கை உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடந்ததாக நியூயார்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசரின் தம்பி இளவரசர் அகமது பின் அப்துல்அஸிஸ், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த உறவினர் இளவரசர் நவாஃப் பின் நயீப் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2017 ஆம் ஆண்டு முகமது பின் சல்மானால் வீட்டுக் காவலில் வைக்கப்படும் வரை முகமது பின் நயீப் சௌதி அரேபியாவின் உள்துறை அமைச்சராக இருந்தார்.

Presentational grey line

க. அன்பழகன் வாழ்க்கையும் பயணமும்

க. அன்பழகன்

பட மூலாதாரம், dmk facebook page

தி.மு.க. பொதுச் செயலாளரும் மூத்த திராவிட இயக்கத் தலைவருமான க. அன்பழகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 98.

Presentational grey line

டெல்லி கலவரம்: மருத்துவமனையில் நடந்த திருமணம்

Delhi Violence Al Hind Hospital Marriage

அன்றிரவு கனமழை பெய்தது. அந்த இரவு முஸ்தஃபாபாத்தில் உள்ள அல் ஹிந்த் மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்து புதுமணப்பெண் ருக்சரை விடுவிக்கும் இரவாக இருந்தது.

Presentational grey line

கள்ளிப்பால் ஊற்றி பெண் சிசு கொலை

new born baby

பட மூலாதாரம், greenleaf123 / getty images

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பி.மீனாட்சிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்துள்ளனர் என வழக்கு பதிவாகியுள்ளது.

வைரமுருகன்-செளமியா தம்பதிக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் கொன்று புதைத்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Presentational grey line

மலேசியாவில் கொரோனா கிருமியின் தாக்கம்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் முகக்கவசம் அணிந்திருக்கும் விமானப் பணிப்பெண் ஒருவர். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், NICOLAS ASFOURI / getty images

படக்குறிப்பு, கோலாலம்பூர் விமான நிலையத்தில் முகக்கவசம் அணிந்திருக்கும் விமானப் பணிப்பெண் ஒருவர். (கோப்புப்படம்)

மலேசியாவில் கொரோனா கிருமியின் தாக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 6) ஒரே நாளில் மட்டும் புதிதாக 28 பேருக்கு இக்கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: