தால் எரிமலை சீற்றம்: தப்பிக்க முயலும் மக்கள், சாம்பல் சூழ்ந்த நகரங்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தால் எரிமலை, ஞாயிறு முதல் நெருப்பை கக்கத் தொடங்கியுள்ளது. எரிமலை சீற்றத்தால் கடுமையான ஒலி எழுந்துள்ளதுடன், அருகாமையிலுள்ள இடங்களில் நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது.

எரிமலையிலிருந்து வரும் நெருப்பின் சாம்பல் வானத்தை மூடியுள்ளதை பார்க்க முடிகிறது.

பிலிப்பைன்ஸில் உள்ள இரண்டாவது முக்கிய எரிமலை இது. உலகிலுள்ள சிறிய எரிமலைகளில் இதுவும் ஒன்று.

அந்நாட்டின் தலைநகரான மணிலாவின் தெற்கில் இந்த எரிமலை உள்ளது. எரிமலையிலிருந்து நெருப்புக்குழம்புகள் வெளிவரத் தொடங்கியதால், அதைச்சுற்றி 70 கி.மீ பரப்பளவிலுள்ள நகரங்கள் பலவும் கரும்புகை மற்றும் சாம்பலால் சூழப்பட்டுள்ளன.

எரிமலையிலிருந்து தீப்பிழம்புகளும், சாம்பலும் வெளிவரும் நேரத்தில், மின்னல் வெட்டும் காட்சியும் பார்க்க முடிந்ததாக கூறப்படுகிறது.

எரிமலையை சுற்றியுள்ள நகரங்களில் எரிமலை சாம்பல் சூழ்ந்துள்ளது. எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பலிலிருந்து தப்பிக்க மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

கரும்புகை மற்றும் சாம்பலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த பெண்மணி குடையை பயன்படுத்துகிறார்.

இதுவரை 8,000 மக்கள் இந்த பகுதியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

தனவூன் நகரில் உள்ள மக்கள் பெரிய வாகனங்களை பயன்படுத்தி வெளியேறினர். அவர்களின் நகரில் மிக அதிக அளவிலான சாம்பல் படிந்ததால், கனரக வாகனங்களை பயன்படுத்தும் சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது.

சிலர் தங்களின் சொந்த வாகனங்களில் வெளியேறினர்.

எரிமலைக்கு மிக அருகில் உள்ள படங்கள் மாகாணத்தில் வாழும் இந்த இளைஞர் தனது படகைக்கொண்டு தப்பிக்கிறார்.

ஆனால், சிலரால் தப்பிக்க முடியவில்லை. இந்த பூனைகள் சாம்பல் புகை வீழ்வது அடங்கட்டும் என காத்திருக்கின்றன.

திங்கட்கிழமை எரிமலை சீற்றம் தொடங்கியதை காண வந்திருக்கும் டகதே நகர மக்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: