வேலைவாய்ப்பின்மை: வாழ்வாதாரத்திற்காக செருப்பை சுத்தம் செய்யும் பொறியியல் பட்டதாரி மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
உணவுக்காக செருப்புகளை சுத்தம் செய்யும் பொறியியல் பட்டதாரி
கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி எத்தியோப்பியா இளைஞர் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக செருப்புகளை சுத்தம் செய்து வருகிறார் . 27 வயதான செக்கோலே மென்பெருவுக்கு சிறு வயதில் பல கனவுகள் இருந்தன. வாழ்க்கையில் உச்சங்களைத் தொட வேண்டும் என நினைத்தவரை வறுமை பின்னுக்கு இழுத்தது. பள்ளிக்கே செல்ல முடியாத அளவுக்கு வறுமை.
ஆனால், வீட்டில் பிடிவாதம் பிடித்து பள்ளிக்கு சென்றார். கட்டணம் செலுத்துவதற்காகப் பகுதி நேரமாக செருப்புகளை சுத்தம் செய்யும் வேலைகளை செய்தார். "அந்த சமயங்களை இப்படியான வேலைகள் செய்து வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வந்த விளிம்பு நிலை மனிதர்களை நினைத்து கொள்வேன்," என்கிறார்.

எத்தியோப்பியாவில் அதிக அளவில் பொறியாளர் தேவைபடுவார்கள் என பேச்சு நிலவியதால் 2013ஆம் ஆண்டு கெமிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்திருக்கிறார். ஆனால், அவர் நினைத்து போல நடக்கவில்லை. படித்து முடித்தபின் அவர் கனவுகள் ஏதும் கைகூடவில்லை.
வேலைக்காக எத்தியோப்பியா எங்கும் முயன்று பார்த்த அவர், மீண்டும் செருப்புகளை சுத்தம் செய்யும் வேலைக்கே திரும்பிவிட்டார். புதிய வேலைவாய்ப்புகளை உண்டாக்காமல், வெற்று அரசியல் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் அதிகம் எத்தியோப்பியா அரசு கவனம் செலுத்துவதே இப்படியான நிலைக்குக் காரணம் என்கிறார் செக்கோலே.

ஜே.என்.யு. பல்கலையில் முகமூடிக் கும்பல் வன்முறை; மாணவர் தலைவர் மீது கொடூர தாக்குதல்

பட மூலாதாரம், JNU STUDENT
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சபர்மதி விடுதியில் குழுமியிருந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் கூறுகின்றனர்.
விரிவாகப் படிக்க:ஜே.என்.யு. பல்கலையில் முகமூடிக் கும்பல் வன்முறை; மாணவர் தலைவர் மீது கொடூர தாக்குதல்

சுலேமானீ கொலை: ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம், அமெரிக்காவுக்கு எதிராக முழக்கம்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் புரட்சிகர ராணுவத்தின் தளபதி காசெம் சுலேமானீக்கு அஞ்சலி செலுத்த இரானில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் துக்கத்தில், தங்கள் மார்பை அடித்துக்கொண்டு '' அமெரிக்காவிற்கு மரணம் '' என முழக்கமிட்டனர்.
மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரான் செல்வாக்கு மிகுந்த பிராந்தியமாக உருவெடுத்தற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் இரண்டாவது அதிகாரமிக்க நபராகவும் சுலேமானீ விளங்கினார்.

அமெரிக்கா- இரான் மோதல் : ஆட்சி கவிழ்ப்பு முதல் அணு ஒப்பந்தம் வரை

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் இராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில் சென்ற இரான் புரட்சிகர ராணுவ தலைவர் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இது இரு நாடுகளிடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஆனால் அமெரிக்க - இரான் மோதல் இப்போது தொடங்கியது அல்ல.
விரிவாகப் படிக்க:அமெரிக்கா- இரான் மோதல் : ஆட்சி கவிழ்ப்பு முதல் அணு ஒப்பந்தம் வரை

"தொடர்பில் இருப்போம்"

பட மூலாதாரம், Getty Images
இரான்- அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தாம் சற்று முன் இரான் வெளியுறவு அமைச்சருடன் பேசியதாகவும், தொடர்பில் இருப்பதென்று இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இரானின் சக்திமிக்க புரட்சிகர காவல் படையின் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ இராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார்.
விரிவாகப் படிக்க:இரான் - இந்திய வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்: "தொடர்பில் இருப்போம்"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












