You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்ரிக்கா: காலனியாதிக்க காலத்தில் 'கொள்ளையடிக்கப்பட்ட புதையல்கள்' திரும்பக் கிடைக்குமா?
காங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிபர் பெலிக்ஸ் சிஷேகேடி சனிக்கிழமையன்று தலைநகர் கின்ஷாஸாவில் புதிய தேசிய அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகம் தென் கொரிய சர்வதேச கூட்டுறவு முகைமையின் நிதி உதவியுடன் மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. கடந்த ஜூன் மாதம் இது கட்டி முடிக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தில் காங்கோ ஜனநாயகக் குடியரசின் வரலாறு மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகம் மூலம் காலனியாதிக்க காலத்தின்போது அயல்நாட்டுக்கு எடுத்து செல்லப்பட்ட அனைத்து பொருட்களும் திரும்பவும் சேகரிக்கப்படுவது விரிவடையும் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசு 1908ல் பெல்ஜியத்தின் காலனியாதிக்கத்துக்கு உட்பட்டு பின்னர் 1960ல் சுதந்திரம் பெற்றது.
இவ்வாறு பழைய பொருட்களை மீட்பதில் பெல்ஜியத்தில் அமைத்துள்ள மத்திய ஆப்ரிக்காவின் ராயல் அருங்காட்சியகத்தில் இருந்து தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவதே அவர்களுக்கு முதன்மையான நோக்கமாக உள்ளது.
காங்கோ ஜனநாயக குடியரசின் முன்னாள் அதிபர் ஜோசஃப் கபிலா பெல்ஜியம் நாட்டிடம் இவை பற்றி கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால் அதிகாரபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆப்ரிக்காவின் 'கொள்ளையடிக்கப்பட்ட புதையல்கள்' எனக் கூறப்படும் இந்தப் பழமையான பொருட்களை மீட்பது குறித்து பல ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.
2018ல் வெளியான முக்கியத்துவம் வாய்ந்த பிரெஞ்சு அறிக்கை ஒன்றின்படி, வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பல பொருட்கள் ஆப்பிரிக்காவுக்கு சேர வேண்டிவையாகும்.
கடந்த காலத்தில் தங்கள் நாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தின் இருக்கும் ஆப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களைத் திருப்பிக் கொடுக்க மேற்கத்திய நாடுகள் மறுத்தன.
காங்கோ ஜனநாயக குடியரசில் அவற்றைப் பாதுகாக்கப் போதிய வசதியின்மையையும், அங்குள்ள அரசியல் நிலையின்மையால் உண்டாக வாய்ப்புள்ள பாதிப்பு ஆகியவற்றை அந்த நாடுகள் காரணமாகக் கூறின.
ஆனால் இந்த புதிய அருங்காட்சியகக் கட்டடம் அவை அனைத்தையும் பாதுகாக்க மற்றும் ஒரே நேரத்தில் பல பொருட்களை காட்சிக்கு வைக்கும் அமைப்புகளை கொண்டுள்ளது.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் பல்வேறு பூர்வகுடி இனங்களைச் சேர்ந்த செய்த கைவினைப் பொருட்கள் மற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகம் மற்றும் இங்குள்ள பொருட்களால் உலகில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் கலையில் தூண்டுதல் கிடைக்கும் என நம்புவதாக பிபிசியிடம் பேசிய உள்ளூர் கலைஞர் அம்மி ம்பானே கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்