You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட பாக்தாதி: காணொளி வெளியீடு மற்றும் பிற செய்திகள்
இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் அமைப்பின் (ஐ.எஸ்) தலைவர் கொல்லப்பட்ட, வட சிரியாவில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலின் காணொளியை அமெரிக்க ராணுவம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
பதுங்கு குழிக்குள் செல்வதற்கு முன்னர் அபு பக்கர் அல்-பாக்தாதி மறைந்திருந்த இடத்தை நோக்கி செல்கையில் தரையில் இருந்த ஆயுதப்படையினர் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டதை இந்த காணொளி காட்டுகிறது.
தரையிலிருந்த குகைக்குள் ஓடிய அல்-பாக்தாதி, அவர் தரித்திருந்த தற்கொலை குண்டை வெடிக்க செய்து தன்னை மாய்த்து கொண்டார். பின்னர் அந்த வளாகம் முழுவதும் வெடிபொருட்களால் அழிக்கப்பட்டது.
பக்தாதி மறைந்திருந்த இடம் இப்போது "பெரிய குழிகள் இருக்கும் வாகன நிறுத்துமிடம்” போல தோன்றுவதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க ராணுவ தலைமை தளபதி கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
முன்னர் குறிப்பிட்டதைபோல மூன்று குழந்தைகள் அல்ல, அல்-பாக்தாதியோடு சேர்ந்து இரண்டு குழந்தைகள் இறந்ததாக அவர் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவர்கள் போராட்டம்: 'அரசுப் பணிக்கு காத்திருக்கும் 10,000 மருத்துவர்கள்' - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிவரும் அரசு மருத்துவர்கள் நாளை (வியாழக்கிழமை) பணிக்குத் திரும்பாவிட்டால், புதிய மருத்துவர்களை நியமிக்கப்போவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.
ஆனால், தங்களை திறந்த மனதோடு அழைத்துப் பேசாவிட்டால் பணிக்குத் திரும்பப்போவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
விரிவாக வாசிக்க:'தமிழகத்தில் 10,000 மருத்துவர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கின்றனர்' - அமைச்சர் எச்சரிக்கை
'கியார்' புயலை அடுத்து 'மகா' புயல் உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்
அரபிக் கடலில் கியார் புயல் ஏற்பட்டுள்ள நிலையில், 'மகா' என்ற மற்றொரு புயல் ஏற்பட்டுள்ளது என இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் உள்ள பயிர்கள் மற்றும் உப்பளங்களை வெகுவாக பாதிக்கக்கூடும் என நம்பப்படும் இந்த 'மகா' புயல், திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக வாசிக்க:'கியார்' புயலை அடுத்து 'மகா' புயல் உருவானது
காஷ்மீரில் சுற்றுலா செல்ல உகந்த சூழல் திரும்பிவிட்டதா - பிபிசி கள ஆய்வு
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள குல்மார்கில் உள்ள ஓய்வு விடுதிகளில் அரிதாகவே சுற்றுலாப் பயணிகள் வந்து அதன் அழகை ரசிக்கின்றனர்.
வரக்கூடிய நாட்களில் சுற்றுலாத் துறை மீண்டும் சூடுபிடிக்கும் என அங்கு சுற்றுலா தொழிலை சார்ந்துள்ளவர்கள் நம்புகின்றனர். குல்மார்க் செல்லும் சாலைகள் கூட்ட நெரிசல் இன்றியே காணப்படுகின்றது.
இந்தியா - சௌதி அரேபியா உறவு: எரிசக்தி தேவையைக் கடந்த பந்தம்
கடந்த சில ஆண்டுகளில் வளைகுடா பகுதியில் மிகப் பெரிய நாட்டுடன் இந்தியாவுக்கு பலமான உறவு ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்த வாரம் சௌதி அரேபியா பயணம் மேற்கொண்டிருந்தார்.
மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவர் சௌதி பயணம் மேற்கொண்டார். 2016ல் முதன்முறையாக அவர் சௌதி சென்றபோது, மன்னர் சல்மான், சௌதி அரேபியாவின் மிக உயரிய விருதை அவருக்கு வழங்கினார்.
விரிவாக வாசிக்க:எரிசக்தி தேவையைக் கடந்து இந்தியாவுக்கு சௌதி அரேபியா ஏன் தேவை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்