பிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே நால்வர் குத்திக்கொலை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட நால்வரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் வெளியிடப்படாத தாக்குதலாளி நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
அப்போது வளாகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள், பயத்தில் காவல்துறை வளாகத்தில் இருந்து கண்களில் கண்ணீருடன் அலறியடித்து கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டி வரும் பிரான்ஸ் காவல்துறையினர், தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட அடுத்த தினமே இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

இதுகுறித்த வழக்கு விசாரணை உடனடியாக தொடங்கியுள்ளது.
தாக்குதலாளியின் நோக்கம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. எனினும், பணியிடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த உயிர் பறிக்கும் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சௌதி பத்திரிகையாளர் 'கொடூரமாக கொல்லப்பட்டதன்' ஆதாரங்கள்

பட மூலாதாரம், Getty Images
இஸ்தான்புல் நகரில் வரிசையாக மரங்கள் நின்றிருந்த அமைதியான ஒரு பகுதி வழியே நான் நடந்து சென்று, நிறைய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியிருந்த நிற கட்டடம் ஒன்றை நெருங்கினேன்.
ஓராண்டுக்கு முன்பு நாடு கடத்தப்பட்டிருந்த சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் படம் இதே கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. அதுதான் அவருடைய கடைசி படமாக இருக்கும்.
சௌதி அரேபிய தூதரகத்தில் அவர் நுழைந்தார். அங்குதான் அவர் கொலை செய்யப்பட்டார்.

அமெரிக்காவும் சீனாவும் சண்டையிட்டால் தமிழகம் ஏன் தடுமாறுகிறது?

பட மூலாதாரம், Getty Images
'சில்லென்ற கோவை' என்று உள்ளூர்வாசிகள் பெருமைப்படும் கோயம்புத்தூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் மனங்கள் இப்போது பொருளாதார மந்தநிலையால் தகிக்கின்றன.
கோவையில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உலகின் வேறு இருநாடுகளில் நடக்கும் பொருளாதார மோதல், மேற்குத் தமிழகத்தின் தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் வாழ்விலும் எதிரொலிக்கிறது.
இங்குள்ள தொழிலார்களில் பிகார், மேற்கு வங்கம், ஒடிஷா போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கணிசமாக உள்ளனர் என்பதால் பாதிப்புகள் மேலும் நீள்கின்றன.

Joker - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், WARNER BROS
டிசி காமிக்ஸின் பேட்மேன் கதைகளில் வில்லனாக வரும் ஜோக்கரை பிரதான பாத்திரமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் இது.
பேட்மேன் படங்களில் எந்த நோக்கமும் இல்லாமல், எங்கிருந்து வந்தான் எனத் தெரியாமல் வில்லத்தனம் செய்யும் ஜோக்கர் பாத்திரத்திற்கு, ஒரு பின்னணியைக் கொடுக்கிறது இந்தப் படம்.
1981ஆம் ஆண்டு. கோதம் நகரம். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது நகரம். இந்த ஊரில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஆர்தர் ஃப்ளெக் (ஜாக்வின் ஃபோனிக்ஸ்) தன் தாயுடன் வசித்துவருகிறான். சம்பந்தமில்லாத தருணங்களில் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் பிரச்சனையும் ஆர்தருக்கு இருக்கிறது.
விரிவாக படிக்க:Joker - சினிமா விமர்சனம்

மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறதா இலங்கை சுற்றுலா துறை?

இலங்கையின் எழில்மிகு பெந்தோட்டை கடற்கரையில் தனக்கு வருவாய் ஈட்ட முயற்சிக்கிறார் ஜிலான் ராஜித.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சர்ஃபிங் போர்டு மற்றும் ஓய்வுக்கான மெத்தைகளை வாடகைக்கு விடுவதுதான் இவரது தொழில்.
ஆனால் சுற்றுலாப் பயணிகளைத்தான் காண முடியவில்லை.
சில மாதங்களுக்கு முன் வரை ஒரு பரபரப்பான சுற்றுலாக் கடற்கரை இது.
ஆனால், ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு நிலைமையே மாறிவிட்டது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












