உணவு சமைக்க கஞ்சா, எரிமலை அடிவாரத்தில் வீடு - கைதான தொலைக்காட்சி பிரபலம்

இத்தாலியின் சிசிலி தீவில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சமையல் கலைஞர் ஒருவர், கஞ்சாவை வைத்து உணவுகளுக்கு புதிய சுவை ஊட்டுவது பற்றி தாம் ஆய்வுகள் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கார்மெலோ க்யாராமோன்தே எனும் 51 வயதாகும் அந்த பிரபல சமையல் கலைஞரின் வீட்டில் இருந்து இரண்டு பெரிய கஞ்சா செடிகள் மற்றும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட செடிகளில் இருந்து கிடைத்த ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா கலக்கப்பட்ட காஃபி, வைன் மற்றும் ஆலீவ் உணவு வகைகள் ஆகியவையும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.

அவரது வீடு மவுண்ட் எட்னா எரிமலையின் அடிவாரத்தில் உள்ள த்ரெஸ்காதாஞ்சி எனும் கிராமத்தில் அமைத்துள்ளது.

வாசனை உணர்வுகள் மற்றும் மத்திய தரைக்கடல் பிரதேசத்தில் வாழும் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அவர் உணவு சமைப்பார் என்று அவரது இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் 'சாகாவரம் பெற்ற மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய' உணவுகள் பற்றிய ஒரு பிரபல சமையல் கலை நிகழ்ச்சியை தொலைக்காட்சி ஒன்றில் வழங்கி வந்துள்ளார் என்று 'லா சிசிலியா' எனும் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :