நியூயார்க் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்: இதுவரை காணாத புகைப்படங்கள்

பழமையான பொருட்களை சேகரிக்கும் ஒருவர் சில குறுந்தகடுகளை வாங்கி உள்ளார். ஆனால், வாங்கிய போது அவருக்கு தெரியவில்லை, தாம் வாங்கி இருப்பது ஒரு பொக்கிஷத்தை என்று.

ஆம், அவர் வாங்கிய குறுந்தகட்டில் 2400 புகைப்படங்கள் இருந்தன. அவை அனைத்தும் நியூயார்க் 9/11 தாக்குதல் குறித்த புகைப்படங்கள்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் அடையாளம் தெரியாத ஒரு கட்டட தொழிலாளியால் எடுக்கப்பட்டவை.

தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையத்தின் சிதிலங்களை அப்புறப்படுத்திய போது எடுத்த புகைப்படங்கள்.

மோசமான நிலையில்

புகைப்படங்கள் உள்ள குறுந்தகடுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்தாலும், அத்தனை புகைப்படங்களையும் மீட்க முடிந்தது.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் ஃப்ளிக்கர் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பல்வேறு கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

விமானத்தை கடத்தி நடத்தப்பட்ட இந்த இரட்டை கோபுரத் தாக்குதலில் மட்டும் குறைந்தது 3000 பேர் பலியானார்கள்.

புகைப்பட கலைஞர் யார்

இந்த புகைப்படங்களை வாங்கிய இரு பழமையான பொருட்களின் சேகரிப்பாளர்களில் ஒருவரான ஜொனாதன், "விற்பனையின் போது பொதுவாக இதுமாதிரியான பொருட்கள் உதாசீனப்படுத்தப்படும்" என்கிறார்.

பழமையான பொருட்களை சேகரிக்கும் இவரது நண்பரான ஜாசன் மூலம் இந்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை எடுத்த நபரை இந்த இருவரும் தேடி வருகிறார்கள்.

இந்த தாக்குதலில் நேரடியாக மூவாயிரம் பேர் இறந்திருந்தாலும், மறைமுகமாக 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :