ஹாங்காங்கில் வெடித்தது வன்முறை - குவியும் போராட்டக்காரகள் தொடரும் பதற்றம்

ஹாங்காங்

பட மூலாதாரம், Billy H.C. Kwok

பல தசாப்தங்களுக்குப்பிறகு, ஹாங்காங்கில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கிருக்கும் சில அரசு அலுவலங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இன்று காலை (வியாழக்கிழமை) முதலே, மிகப்பெரிய அளவிலான கூட்டம் ஹாங்காங் அரசு அலுவலகங்களை சுற்றி சிதற ஆரம்பித்துள்ளனர். நேற்றைய தினம், இந்த பகுதியில்தான் போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு எதிராகத்தான் தற்போது இந்த போராட்டம் வெடித்துள்ளது.

ஆனால், இந்த சட்ட திருத்தத்தை செய்யும் முடிவிலிருந்து இதுவரை ஹாங்காங் பின்வாங்கவில்லை.

போராட்டம் நடக்கும் பகுதிகள்
படக்குறிப்பு, போராட்டம் நடக்கும் பகுதிகள்

நேற்றைய தினம், சட்டமன்ற கவுன்சில் வளாகத்துக்கு அருகேயுள்ள முக்கிய சாலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது போலீஸார் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.

இந்த வன்முறை சம்பவத்தில், 15 முதல் 66 வயதுக்குட்பட்டவர்களில் 72 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் அபாய கட்டத்தில் இருக்கின்றனர்.

எதற்காக இந்த போராட்டம்?

கொலை செய்வது, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை சீனா, தைவான், மக்காவில் உள்ள அதிகாரிகள் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைத்தால், ஹாங்காங் அவர்ளை ஒப்படைப்பதற்கு வழிவகை செய்யும் விதமாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் முன்மொழிந்துள்ள சட்டதிருத்தம் உள்ளது.

இந்த கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு விவகாரத்துக்கு தனித்தனியாக முடிவெடுக்கப்படும்.

ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பின் இப்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியது.

ஹாங்காங்

பட மூலாதாரம், SOPA Images

கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா, தைவான் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்ட திருத்தம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டம் மூலமாக அரசியல் ரீதியாக எதிராக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் கருதுகிறார்கள்.

ஆனால், ஹாங்காங் நீதித்துறையிடம்தான் முழு அதிகாரம் இருக்கும். அரசியல், மத ரீதியான குற்றங்கள் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என ஹாங்காங் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹாங்காங் அரசின் நிலைப்பாடு என்ன?

போரட்டம் தீவிரமாக நடந்தாலும் இந்த சட்ட திருத்தை மேற்கொள்ள ஹாங்காங் தீவிரமாக உள்ளது.

அதே நேரம், இரண்டாவது முறையாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது ஹாங்காங் சட்டமன்றம் இதனை தாமதப்படுத்தி உள்ளது.

சீன ஆதரவு சட்டப்பேரவை, புதன்கிழமை நடப்பதாக இருந்த கூட்டத்தை நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

ஹாங்காங்கின் கதை

எப்படியாக இருந்தாலும் ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டில்தானே உள்ளது. பின் ஏன் இந்த சட்ட திருத்தமென சந்தேகம் ஏற்படலாம். அதற்கு ஹாங்காங் குறித்து அடிப்படையான சில தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஹாங்காங்

பட மூலாதாரம், HECTOR RETAMAL

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டப் பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு முறைகளை கொண்டு இயங்கி வருகிறது.

ஹாங்காங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது. சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹாங்காங் மக்களுக்கு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளுடன் ஹாங்காங் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தை போட்டுள்ளது. ஆனால், அது போன்ற சட்ட ஒப்பந்தமும் சீனாவுடன் இல்லை. இருபது ஆண்டுகளாக இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சீனாவுடன் இந்த சட்ட ஒப்பந்தம் எட்டப்படாததற்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சீனாவில் உள்ள மோசமான சட்டப்பாதுகாப்புதான் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஹாங்காங்கில் என்ன நடக்கிறது? - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :