You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.எஸ் அமைப்பு, வட கொரியா, ரஷ்யா, சீனா, இரான் - அமெரிக்காவின் அச்சுறுத்தல் யார்?
வட கொரியா தன்னிடமுள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் கைவிடுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என அமெரிக்க உளவு அமைப்பின் தகவலொன்று கூறுகிறது.
இரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடவில்லை. ஆனால் சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் இணையத் தாக்குதல் வளர்ந்து கொண்டே போவது கவலை அளிப்பதாக உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கை கூறுகிறது.
இரண்டு நாடுகளும் 2020 அமெரிக்கத் தேர்தலில் தாக்கம் செலுத்த முயல்வதாக அந்த அறிக்கை விவரிக்கிறது.
தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் டான் கோட்ஸ் மற்றும் பிற உளவு அதிகாரிகள் இந்த அறிக்கையை செனட்டில் சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கை கூறுவதென்ன?
- அமெரிக்காவின் பேச்சுவார்த்தை மற்றும் பல முயற்சிகள் எடுத்தும் கூட வட கொரியா அணு ஆயுதத்தை கைவிடுவதாக தெரியவில்லை.
- அமெரிக்க அதிபர் டிரம்பும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இருநாட்டு உறவில் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை.
- சீனாவும், ரஷ்யாவும் 1950 மத்தியில் ஒற்றுமையாக இருந்ததைவிட இப்போது மிக ஒற்றுமையாக உள்ளனர். இவர்களிடமிருந்து வரும் இணைய தாக்குதல் அச்சம் தருவதாக உள்ளது. 2020 அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்தலாம்.
- இரான் தற்சமயம் எந்த அணு ஆயுத உற்பத்தியிலும் ஈடுபடவில்லை என்றாலும் அந்நாட்டின் வட்டார லட்சியங்கள் வளர்ந்துள்ளன. அவர்களின் ராணுவத் திறனும் மேம்பட்டுள்ளது. இது நிச்சயம் எதிர்காலத்தில் அமெரிக்க நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
- இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ்.எஸ் அமைப்பு இன்னும் முழுமையாக வீழ்த்தப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை. ஆனால். அண்மையில் அதிபர் டிரம்ப் அந்த அமைப்பு வீழ்த்தப்பட்டுவிட்டது என்றும் சிரியாவிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் கூறி இருந்தார்.
- நட்பு நாடுகள் கவலை தெரிவித்ததை அடுத்து, இந்த துருப்புகளை மெதுவாக திரும்பப்பெற அமெரிக்கா ஒப்புக் கொண்டது.
- அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தற்காலிக செயலாளர் செவ்வாய்க்கிழமை, "ஐ.எஸ் கட்டுப்பாட்டிம் இருந்த 99.5 சதவீத நிலப்பரப்பு மீண்டும் சிரியாவின் கைகளுக்கே சென்றுவிட்டதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் இது 100 சதவீதமாக ஆகும்" என்று கூறி இருந்தார்.
பிற செய்திகள்:
- டெல்டாவில் மீத்தேன்: "உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்"
- தொலைக்காட்சி நட்சத்திரம் மீது தாக்குதல்: அமெரிக்காவில் மற்றொரு வெறுப்பு நிகழ்வு
- ஜார்ஜ் பெர்ணான்டஸ்: ரயில் வேலை நிறுத்தம் மூலம் இந்தியாவை அதிரவைத்தவர், ஈழ ஆதரவாளர்
- மும்பை தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை நினைவு கூரும் 'தாக்கரே' திரைப்படம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :