You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒருபாலுறவு நபரை நேர்காணல் செய்த எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு சிறை தண்டனை
கடந்த ஆண்டு ஒருபாலுறவு நபறொருவரை நேர்காணல் செய்த எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு கடும் பணிகள் உள்ளடங்கிய ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது சொந்த எல்டிசி தொலைக்காட்சி சேனலில் "ஓரினச்சேர்க்கைகளை ஊக்குவித்ததாக" குற்றம்சாட்டி எகிப்தின் கிஸா நகரில் உள்ள ஒரு நீதிமன்றம் முஹமத் அல்-கெயிட்டி என்ற அந்த தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு 3,000 எகிப்திய பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.
இவர் நேர்காணல் செய்த ஓரினச்சேர்க்கை நபர் ஒரு பாலியல் தொழிலாளியாக தனது வாழ்க்கை பற்றி நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். இவர் பெயர் உள்ளிட்ட தகவல்கள் நேர்காணலில் மறைக்கப்பட்டிருந்தது.
எகிப்தில் ஒருபாலுறவு குற்றச்செயலாக வெளிப்படையாகக் கருதப்படவில்லை. ஆனாலும், எல்ஜிபிடி சமூகத்தினர் மீது அதிகாரிகள் எடுத்துவரும் எதிர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.
பொதுவாக பரஸ்பரம் விருப்பத்துடன் ஒருபாலுறவில் ஈடுபடுபவதாக சந்தேக நபர்களை துன்புறுத்துதல், ஒழுங்கீனம் அல்லது மத நிந்தனை குற்றச்சாட்டுகளை சுமத்தி அதிகாரிகள் கைது செய்வர்.
கடந்த 2018 ஆகஸ்டில் நடந்த இந்த தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பாக தொலைக்காட்சி தொகுப்பாளர் முஹமத் அல்-கெயிட்டி மீது, எகிப்தில் பல பிரபலங்கள் மீது வழக்கு தொடுக்கும் நன்கு அறியப்பட்ட வழக்கறிஞர் சமிர் சப்ரி அண்மையில் வழக்கு தாக்கல் செய்தார்.
பல சந்தர்ப்பங்களில் ஒருபாலுறவுக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்திய இந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் தொழிலாளி போல அமைந்துவிட்ட தனது வாழ்க்கை குறித்து பேசிய நபரிடம் நேர்காணல் செய்தார்.
தனது வருத்தங்களை, வாழ்க்கை நிலையை விரிவாக விவரித்த நபரின் முகம் நேர்காணலில் மறைக்கப்பட்டிருந்தது.
எகிப்தின் உயர் ஊடக அமைப்பான ஊடக ஒழுங்குமுறை உயர் கவுன்சில் உடனடியாக இரண்டு வாரங்களுக்கு இந்த தொலைக்காட்சி சேனலை ஒளிப்பரப்பப்படுவதை தடை செய்தது.
முஹமத் அல்-கெயிட்டி மீது வழக்கு தொடுத்த வழக்கறிஞர் சமிர் சப்ரி, அவர் பண ரீதியான ஆதாயம் பெறுவதற்காக ஒருபாலுறவு நடவடிக்கைகளை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார்.
சிறை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனை விதிக்கப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர், அவரது தண்டனை காலத்துக்கு பிறகு ஓராண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்.
பிரிட்டனில் தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க குரல் கொடுத்த இந்திய வம்சாவளி பெண்கள்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்