அமெரிக்க ஆற்றில் அதிசய நிகழ்வு - சுழலும் பனித்தகடு

அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் உலகெங்கும் உள்ள மக்கள் வியக்கும் வகையில் ஒரு இயற்கை அதிசயம் நிகழ்ந்துள்ளது.

அந்த மாகாணத்தில் உள்ள வெஸ்ட்புரூக் நகரின் அருகில், பிரேசம்ஸ்காட் நதியில் சுமார் 91 மீட்டர் அகலமுள்ள, மாபெரும் வட்ட வடிவப் பனித் தகடு உருவாகியுள்ளது.

இந்த விசித்திரமான இயற்கை நிகழ்வு, வேற்றுகிரக விண்கலம் அல்லது நிலா போல காட்சியளிக்கிறது.

தண்ணீரின் வெப்பநிலையில் மாறும் போது, அதன் அடியில் ஒரு சுழல் போல உருவாகி, வட்ட வடிவப் பனித் தகடு சுழல்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்தப் போக்கு கூரிய முனைகளை நீக்கி, வட்ட வடிவை உருவாக்கிறது.

சுழலும் தகடானது, அங்குள்ள வாத்துகள் மற்றும் மற்ற பறவைகளுக்கு படகு போல இருந்ததாக செய்திகள் தெரிவித்தன.

இந்த நிகழ்வு குறித்து உள்ளூர் தொழிலதிபர் ஒருவர், வெஸ்ட்புரூக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, ட்ரோன் பயன்படுத்தி இதனை காணொளியாக பதிவு செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: