You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிகாகோவில் துப்பாக்கிச் சூடு - யாரை குறி வைத்து நடந்தது?
சிகாகோ மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் துப்பாக்கிதாரி என நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
பலியான இரண்டு பெண்களில் ஒருவர் மருத்துவர் மற்றொருவர் உதவி மருந்தாளுநர்.
இதனை மாகாண ஆளுநர் இமானுவேலும் உறுதிப்படுத்தி உள்ளார்.
காவல்துறைக்கும் அந்த துப்பாக்கிதாரிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியாகி உள்ளார். துப்பாக்கிதாரி தம்மைதாமே மாய்த்து கொண்டாரா என தெரியவில்லை.
பெண்ணை குறிவைத்து
இந்த தாக்குதல் பெண்ணை குறி வைத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த துப்பாக்கிதாரி தன்னுடன் நட்பில் இருந்த பெண்ணை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளார். ஆனால், தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
நகரத்தின் ஆன்மாவில்
சிகாகோ ஒரு மருத்துவரை, ஒரு மருந்தாளுநரை, ஒரு காவல் துறை அதிகாரியை இழந்துள்ளது. நகரத்தின் ஆன்மாவில் கண்ணீர் வடிகிறது. இது தீமையின் முகம் என ஆளுநர் இமானுவேல் கூறி உள்ளார்.
இந்த சம்பவமானது உள்ளூர் நேரப்படி மதியம் மூன்று மணிக்கு சிகாகோ மெர்ஸி மருத்துவமனையில் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் சிறு காயங்களுடன் உயிர்தப்பிய காவல் அதிகாரி குண்டு துளைத்த துப்பாக்கியின் படத்தை பகிர்ந்துள்ளார் என்கிறது சிகாகோ செய்தி ஊடகமான எபிசி7.
காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காவல் அதிகாரி ஒருவர் இறந்துவிட்டதாக காவல் துறை செய்தி தொடர்பாளர் அந்தோனி கூறுகிறார்.
13 ஆயிரம் பேர்
ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் இவ்வாண்டு அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளதாக கூறுகிறது கன் வயலன்ஸ் ஆர்கிவ் இணையதளம்.
மேலும் 25 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும், 250 காவல் துறை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது இறந்துள்ளதாகவும் அந்த இணையதளத்தின் தரவுகள் விவரிக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :