கலிஃபோர்னியா காட்டு தீ: பருவநிலை மாற்றமும், வழக்கத்திற்கு மாறான அசாதாரண நிகழ்வும்

பட மூலாதாரம், Getty Images
கலிஃபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கே உள்ள பேரடைஸ் நகரத்தில் பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறைந்தது 228 பேரை காணவில்லை.
காட்டுத்தீ இன்னும் எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயினால் இதுவரை 7,000 கட்டங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. 15,500 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.
1933 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸில் ஏற்பட்ட கிரிஃபித்ஸ் பார்க் தீ விபத்தைவிட இது மோசமானது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த தீ விபத்தில் 31 பேர் இறந்தனர்.
இந்த காட்டுத் தீயினால் 2,50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
ஏன் காட்டுத்தீ?
கலிஃபோர்னியா காட்டுத் தீ பொதுவாக கோடை காலத்தில் தொடங்கி இலையுதிர் கலாம் வரை இருக்கும். ஆனால், இப்போது ஆண்டு முழுவதும் காட்டுத் தீ ஆபத்து இருப்பதாக கூறுகிறார்கள் வல்லுநர்கள்.

பட மூலாதாரம், Getty Images
பருவநிலை மாற்றம் மற்றும் வானிலை ஆகியவைதான் இந்த காட்டுத்தீ பரவுவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவிலான வெப்பம் பதிவாகிறது. மழை அளவும் குறைந்துள்ளது.
அதிகரித்திருக்கும் வெப்பத்தை காரணம் காட்டி, ஆளுநர் ப்ரவுன் , "இது வழக்கத்திற்கு மாறான சாதாரண நிகழ்வல்ல, வழக்கத்திற்கு மாறான அசாதரண நிகழ்வு" என்று கூறி உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பிரபலங்களின் வீடுகள்
அமெரிக்க நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களான ஜெரார்டு பட்லர், மிலே சைரஸ், கிம் ஆகியோரின் இல்லங்கள் கலிஃபோர்னியா காட்டுத்தீயினால் நாசமாகி உள்ளன.
இவை அனைத்தும் மனிதர்கள் சார்ந்த கணக்கென்றால், இதிலிருந்து விலங்குகளும் தப்பவில்லை என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.
வனவிலங்குகள்
காட்டுத்தீயால் காணாமல் போன அல்லது இறந்து போன தங்களது வளர்ப்பு மிருகங்களின் படங்களை துயரத்துடன் சமூக ஊடகங்களில் மக்கள் பகிர்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images


பட மூலாதாரம், Getty Images

அதுபோல, சில இணைய தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி தொலைந்து போன விலங்குகளை அதன் உரிமையாளர்களுடன் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக சில குழுக்களையும் அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். இதற்கான பிரத்யேக ஹாஷ்டாகுகளையும் உருவாக்கி உள்ளனர்.

பட மூலாதாரம், Twitter

ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான நிலப்பரப்பு இந்த காட்டுத்தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.


பட மூலாதாரம், Getty Images

காட்டுத்தீயால் பாதிப்புகுள்ளான விலங்குகள் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.


பட மூலாதாரம், EPA


பட மூலாதாரம், Getty Images


பட மூலாதாரம், Getty Images


பட மூலாதாரம், Getty Images


பட மூலாதாரம், Getty Images


பட மூலாதாரம், Getty Images
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












