ஜனநாயக கட்சியின் வெற்றியும், டிரம்பின் பின்னடைவும் - 5 தகவல்கள்

ஜனநாயக கட்சியின் வெற்றியும், டிரம்பின் பின்னடைவும் - 5 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வென்றுள்ளது.

இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஐந்து முக்கியமான தகவல்களை காண்போம்.

Presentational grey line
Presentational grey line
  • பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர் டிரம்பின் முயற்சிகளை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.
  • குடியரசு கட்சியை சேர்ந்த ஒருவர் நாட்டின் அதிபராக இருக்கும்போது, பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிகம் நடந்திராத ஒன்றாகும்.
  • இந்த வெற்றியின் மூலம், டிரம்பின் ஆட்சியின் மீதுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து ஜனநாயக கட்சியால் விசாரணைகளை மேற்கொள்ள இயலும்.
ஜனநாயக கட்சியின் வெற்றியும், டிரம்பின் பின்னடைவும் - 5 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

  • அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ள குடியேற்ற கொள்கை, வரி விதிப்பு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது போன்ற பல்வேறு விவகாரங்களில் அதிபர் டிரம்பிற்கெதிரான தாக்குதலை ஜனநாயக கட்சி தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில்தான் அதிகளவிலான பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இதுவரை வந்த முடிவுகளின்படி ஜனநாயக கட்சியை சேர்ந்த 80 பெண்களும், குடியரசு கட்சியை சேர்ந்த 12 பேரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

செனட் சபையின் நிலவரம் என்ன?

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு மட்டுமல்லாது செனட் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது.

தற்போதைய நிலவரத்தின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி செனட் சபையில் தன்னுடைய பலத்தை அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.

ஜனநாயக கட்சியின் வெற்றியும், டிரம்பின் பின்னடைவும் - 5 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

அதாவது, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய செனட் உறுப்பினர்களான ஜோ டோனெலி, கிளாரி மக்காஸ்க்கில், ஹெய்டி ஆகிய மூவரும் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

மேலும், ஜனநாயக கட்சியை சேர்ந்த மற்றொரு செனட் உறுப்பினரான பில் நெல்சன் தான் போட்டியிட்ட பிளோரிடாவில் தோல்வியடையும் நிலையில் உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :