“அவரிடம் எந்த தீங்கையும் காணவில்லை” - கொல்ல விரும்பியவருக்கு சிகிச்சை அளித்த யூத செவிலி

எல்லா யூதர்களையும் கொல்ல விரும்பியதாக கூறிய தாக்குதல்தாரியிடம் தாம் எந்த தீங்கையும் காணவில்லை என்கிறார் அவருக்கு சிகிச்சை அளித்த யூத ஆண் செவிலி.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

சிகிச்சை

தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியான 46 வயதாகும் ராபர்ட் போவர்ஸ் போலீசாரிடம் சரணடைந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் அவரும் காயமடைந்ததால் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தாம் அங்கிருந்த எல்லா யூதர்களையும் கொல்ல விரும்பியதாக அலுவலர்களிடம் தெரிவித்து இருந்தார்.

நான் யூதர் என்று தெரியாது

இந்த சூழலில் அவருக்கு சிகிச்சை அளித்த யூதர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.

அதில், "நான் யூதர் என்று அவருக்கு தெரியாது." என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த யூதரின் பெயர் அரி மெக்லர்.

யூத செவிலி, யூதர்களை கொல்ல முயன்றவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார் என்ற செய்தி அமெரிக்க ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பேசப்பட்டதை தொடர்ந்து இந்த பதிவை பகிர்வதாக கூறுகிறார் அரி.

அந்த பதிவில், "நான் ராபர்ட்டின் விழிகளை பார்த்த போது அதில் எந்த தீங்கையும் காணவில்லை." என்கிறார்.

அவர் இணக்கத்தை உணர வேண்டும் என்று விரும்பினேன். அவரால் கொல்லப்பட்டவர்களுக்கு செய்யும் அஞ்சலியானது, அவருக்கு சிகிச்சை அளிப்பதுதான். அதன் மூலமாக அவர் செய்தது தவறென உணர்த்த விரும்பினேன் என்ற தொனியில் அந்த முகநூல் பதிவை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவானது லட்சகணக்கில் பகிரப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: