புளோரிடாவை புரட்டிப்போட்ட மைக்கேல் சூறாவளி (புகைப்படத் தொகுப்பு)

புளோரிடாவின் வட மேற்கு பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி புதன்கிழமையன்று கரையை கடந்தபோது, மணிக்கு 250கிமீ வேகத்தில் காற்று வீசி பேரும் சேதத்தை உண்டாக்கியுள்ளது.

மெக்ஸிகோ கடற்கரை நகரமான பியரில் மைக்கேல் சுறாவளி ஏற்படுத்திய பாதிப்புகள்

சூறாவளிக்கு முன்பான காட்சிகள் இவை.

மெக்ஸிகோ கடற்கரையில் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன மேலும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன.

மைக்கேல் சூறாவளியால் 9 அடிக்கு மேல் கடல் அலை எழும்பியது.

பனாமா நகரில் உள்ள படகு இல்லம் ஒன்று முற்றிலும் சேதமடைந்துள்ள காட்சி.

புளோரிடாவின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளும் கட்டடங்களும் தரைமட்டமாக இடிந்து விழுந்துள்ள காட்சி.

இந்த சூறாவளியில் பனாமா நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் வீடுகள் இழுத்துச் செல்லப்பட்டன.

பனாமா நகரில் மின்கம்பங்கள் உட்பட அனைத்தும் சரிந்து விழுந்தன மேலும் தெருக்களில் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன.

சூறாவளி கரையை கடந்ததும் குடியிருப்புவாசிகள் அவர்களின் இடிந்த வீடுகளை சுத்தம் செய்வதும், சரி செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சில வீடுகளில் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டதில் அனைத்து உடைமைகளும் நீரில் மூழ்கியது.

மரங்கள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்திருக்கலாம்.

சில கட்டடங்கள் மூன்றாம் நிலைக்கு மேல் வரும் புயலை தாங்கும் அளவுக்கு கட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. புளோரிடாவில் புயல் கரையை கடந்தபோது நான்காம் நிலையில் இருந்தது.

பனாமா நகரில் ரயில் ஒன்று தலைகீழாக விழுந்து கிடக்கும் காட்சி

பனாமா நகரில் புயலில் இருந்து தப்பி சென்ற குடியிருப்புவாசிகள், அங்கு மீட்கப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளை ஒரு கட்டடத்தில் வைத்திருந்தனர். அகட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு பூனை நீரில் மூழ்கியது. மேலும் இரண்டு நாய்கள் தப்பிச் சென்றன.

புளோரிடாவின் சூறாவளியில் சேதமடைந்து காட்சியளிக்கும் மரங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: