ஆறு மில்லியன் மக்கள், 7.5 மில்லியன் லிட்டர் - ஒரு ‘பீர்’ தீருவிழா

ஜெர்மன் மியூனிக் நகர்த்தில் கோலாகலமாக பீர் திருவிழா தொடங்கி உள்ளது.

அக்டோபர் 7 வரை நடக்க இருக்கும் இந்த திருவிழாவில் ஏறத்தாழ ஆறு மில்லியன் மக்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் 7.5 லிட்டருக்கும் அதிகமான அளவில் பீர் பரிமாறப்படும்.

எப்போது தொடங்கியது?

இந்த திருவிழாவானது 1810 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. முதலில் பீர் திருவிழாவாகவெல்லாம் இல்லாமல் குதிரை திருவிழாவாக ஓர் அரச குடும்ப திருமணம் ஒன்றில் தொடங்கி இருக்கிறது. பின் 19 ஆம் நூற்றாண்டில் இது பீர் திருவிழாவாக மாறி இருக்கிறது.

இப்போது நடைபெறும் விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

மியூனிக் மேயர் டையடர் ரைடர் முதல் பீர் பேரலை திறந்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :