You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிலவில் தெரிந்தது சாயிபாபா முகமா? என்ன சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்
நிலாவில் சாயிபாபா உருவம் தெரிகிறது என்பது அண்மையில் தமிழகத்தில் பரவிய வதந்தி. ஆனால், நிலாவில் உருவம் தெரிகிறது என்பது முதல்முறையாக பரவும் வதந்தி அல்ல. ஏன் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இவ்வாறான வதந்தி பரவி இருக்கிறது. நிலாவில், மேகத்தில் ஏசு தெரிகிறார், அன்னை மேரி தெரிகிறார் போன்ற வதந்திகள் காட்டு தீயைவிட வேகமாக பரவி இருக்கின்றன.
சிலர் மேகத்தில் கண்கள் போல உருவம் தெரிவதை பார்த்து இருப்பார்கள். சிலர் மூக்கு, வாய் ஆகியவை நிலாவில் தெரிவதை கவனித்து இருப்பார்கள்.
இதனை ஆங்கிலத்தில் 'பரெடோலியா' என்கிறார்கள். இதனை, 'நிஜத்தில் இல்லாத கற்பனை உருவம்' என புரிந்து கொள்ளலாம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு
ஜெர்மன் வடிவமைப்பு ஸ்டுடியோ ஒன்று 'பரெடோலியா' தொடர்பான ஆய்வில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஈடுபட்டிருந்தது. கூகுள் மேப்பை ஆய்வு செய்து அதில் மனிதர்கள் முகம் போல உள்ள உருவங்களை அடையாளம் காண திட்டமிட்டிருந்தது.
கூகுள் ஃபேசஸ் பல கோணங்களில் இந்த பூமியை நுட்பமாய் ஸ்கேன் செய்வது என்பது திட்டம். அலாஸ்கா மலைகள், ரஷ்யாவின் மகாடன் பகுதி ஆகியவற்றை ஸ்கேன் செய்து, அதில் 'நிஜத்தில் இல்லாத கற்பனை உருவம்' தெரிவதை பதிவு செய்து இருக்கிறது.
கவிதையாக சொல்ல வேண்டுமென்றால் இதுவொரு காட்சி பிழை.
சிக்கனில் தெரிந்த அமெரிக்க அதிபர்
தண்ணீர் சூடுபடுத்தும் கிட்டில் ஒன்று ஹிட்லர் போல காட்சி அளிப்பதாக பரவிய செய்தியை அடுத்து 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஓர் அங்காடி அந்த கிட்டிலை பெருந்தொகைக்கு விற்பனை செய்தது.
அதுபோல சிக்கன் நக்கட் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார் வாஷிங்டன் போல காட்சி பரவியதை அடுத்து 8,100 அமெரிக்க டாலர்களுக்கு அந்த சிக்கன் நக்கட் விற்கப்பட்டது.
பிரிட்டனில் 2009 ஆம் ஆண்டு மேர்மைட் உணவு டப்பாவில் ஏசு போல ஓர் உருவத்தை ஒரு குடும்பம் கண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக 1976 ஆம் ஆண்டு மார்ஸ்- இல் மனித உருவம் காணப்பட்டிருக்கிறது.
ஏன் இவ்வாறான உருவம் தெரிகிறது?
இவை அனைத்தும் நமக்கு நாமே ஒன்றை புரிந்து கொள்வது, அர்த்தப்படுத்திக் கொள்வது என்பது உளவியலாளர்களின் வாதம்.
நாம் அதிகம் நேசிக்கும் ஒரு விஷயம் களைந்து கிடக்கும் மேகத்தில் பார்ப்பது என்பது முழுக்க முழுக்க நம் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பம் சார்ந்த விஷயம் என்கிறார் லண்டன் பல்கலைகழக கல்லூரியை சேர்ந்த நரம்பியல் நிபுணர் சோஃபியா.
மேலும் அவர், இப்படி காட்சி தெரிவது முழுக்க முழுக்க நம் விருப்பம் சார்ந்த விஷயம்.நாம் கேட்க விரும்பும் ஒரு குரல் சில சமயம் நம் செவிகளில் விழும், நம் பார்க்க விரும்பும் முகம் நமக்கு தெரியும். இது நம் விருப்பம் சார்ந்தது என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்