சீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி - அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
சீனப் பொருட்கள் மீது மேலும் வரி வி்திப்பு

பட மூலாதாரம், Getty Images
சீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மின்னணு பாகங்கள், ஹேன்ட் பேக் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வரிகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
25 சதவீதம் கூடுதலாக உள்ள இந்த புதிய இறக்குமதி வரிகள் எப்போது அமலுக்கு வரும் என்று தெரியவில்லை. எந்தெந்த பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என்ற இறுதிப்பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.

குடியேறிகளை கடலில் நிறுத்தி வைக்க வலியுறுத்தல்

பட மூலாதாரம், Reuters
மீட்கப்பட்ட குடியேறிகளின் புகலிட கோரிக்கைகள் சரிபார்க்கப்படும் வரை, கடற்கரையிலேயே அவர்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆஸ்திரியா மற்றும் இத்தாலி நாட்டின் உள்துறை அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடல் வழியாக அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வர முயற்சிக்கின்றனர்.
கப்பலில் முறையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மீதமுள்ள நபர்கள் மூன்றாம் நாடுகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அமைச்சர்கள் மாநாட்டில் தெரிவித்தனர்.
இந்நிலையில், மனித உயிர்களை பாதுகாப்பதே பிரதான முயற்சியாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

முல்லர் விசாரணைக்கு ஒத்துழைப்பு

பட மூலாதாரம், Reuters
2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் முல்லர் கமிட்டிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அதிபர் டிரம்பின் முன்னாள் பிரசார தலைவர் பால் மனஃபோர்ட் ஒப்பு கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் இது தொடர்பான இரண்டு கிரிமினல் குற்றங்களை அவர் ஒப்பு கொண்டார். ஆனால், அதிபர் டிரம்பிற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
மோசடி, வங்கி மோசடி, வங்கி கணக்குகளை காண்பிக்க தவறியது ஆகியவற்றிற்காக கடந்த மாதம் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

உலகின் சக்தி வாய்ந்த புயல்

பட மூலாதாரம், Getty Images
உலகின் வலுவான புயல் இந்தாண்டு பிலிஃபைன்ஸ் நாட்டின் வடக்கு கரையோர பகுதிகளை தாக்கியதையடுத்து, அங்கு வேகமான காற்றுடன் மிக கனமழை பெய்து வருகிறது.
சூப்பர் சூறாவளி மங்கூட் தாக்கியதில் ஜன்னல்கள் உடைந்து, லசன் தீவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி எச்சரிகையையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












