3200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உண்ட ‘பாலாடைக் கட்டி’ கண்டுபிடிப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.

பாலாடைக் கட்டி

பண்டைய எகிப்திய சமாதி ஒன்றை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், அந்த கல்லறையில் இருந்த ஜாடி ஒன்றில் பாலாடைக் கட்டியின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பாலாடைக் கட்டி படிமங்களில் இதுவே மிகவும் பழையது என அவர்கள் நிரூபித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்திய உயரதிகாரியான தஹ்மெஸின் கல்லறையில் சில உடைந்த ஜாடிகளை கண்டுபிடித்தனர். அதில் இறுக்கமான வெள்ளை திடப் பொருளொன்று இருந்தது. அதனை ஆய்வு செய்ததில் அந்த பாலாடைக் கட்டியானது 3200 ஆண்டுக்கு முந்தைய பழமையான பாலாடைக் கட்டி என்று தெரியவந்துள்ளது.

நடனமாடிய புதின்

ஆஸ்திரிய வெளியுறவுத் துறை அமைச்சர், கரின் திருமணத்தில் கலந்துக் கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கரினுடன் நடனமாடினார். புதினை திருமணத்திற்கு அழைத்ததால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார் கரின். ரஷ்ய அதிபருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அனைத்தும் மக்கள் வரிப் பணம் என்று மக்களும், கரின் தன் விருப்பத்திற்கு விருந்தாளிகளை தேர்ந்தெடுத்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைகளை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என எதிர் கட்சியினரும் குற்றஞ்சாட்டி இருந்தனர். ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த செல்லும் வழியில் ஆஸ்திரியாவில் இந்த திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டார் புதின்.

'தமிழன்' நாயகிக்கு திருமணம்

'தமிழன்' எனும் தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவுக்கு பாலிவுட், ஹாலிவுட் என பல உச்சங்களை தொட்டார். அவருக்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்கும் சனிக்கிழமை மும்பையில் திருமணம் நிச்சயம் ஆனது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்கள் என பல வாரங்களாக வதந்தி உலவிய நிலையில் இந்த திருமணம் நிச்சயம் நிகழ்ந்துள்ளது. ஆனால், திருமண தேதி குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பிரியங்காவைவிட நிக்கிற்கு வயது குறைவு.

இணையத்தை கட்டுப்படுத்தும் சட்டம்

எகிப்தில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டம் ஒன்றில் அந்நாட்டு பிரதமர் அப்டெல் ஃபட்டா அல்- சிசி கையெழுத்திட்டுள்ளார். சைபர்கிரைம் எனும் அச்சட்டத்தின்படி தேச பாதுகாப்பு அல்லது பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைதளங்கள் அந்நாட்டில் யாரும் அணுகமுடியாவாறு முடுக்கப்படும். இது போன்ற வலைதளங்களை யாராவது நடத்தி வந்தாலும் அல்லது அப்பக்கங்களில் உதவினாலும் அவர் சிறை தண்டனை அல்லது அபராதம் கட்ட வேண்டிய நிலையை சந்திக்கவேண்டியிருக்கும்.

உலக தலைவர் அஞ்சலி

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் முன்னாள் பொது செயலரான கோஃபி அன்னான் சனிக்கிழமை உயிரிழந்தார். என்பது வயதில் காலமான கோஃபி அன்னானுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை தடைகளை உடைத்த கோஃபி, சிறந்த உலத்திற்கான தமது நாட்டத்தை எப்போதும் நிறுத்தவில்லை என்று கூறி உள்ளார். அது போல இந்திய பிரதமர் மோதி உலகின் சிறந்த ஆஃப்ரிக்க ராஜதந்திரியையும், மனிதநேய பண்பாளரையும் இவ்வுலகம் இழந்துவிட்டது என கூறி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :