பத்திரிகையாளர் மீது வன்முறை அதிகரிப்பு: டிரம்பின் ஊடக விமர்சனத்தை கண்டிக்கும் ஐநா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஊடகங்கள் மீதான விமர்சனங்களால் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை ஆபத்து அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டிரம்பின் விமர்சனங்கள் மூலோபாய திட்டம் கொண்டவை என்று கூறியுள்ள மனித உரிமைகளுக்கான இடை-அமெரிக்க ஆணையத்தின் டேவிட் காயே எடிசன் லான்ஸா, இவை பத்திரிகை சுதந்திரத்தையும், சரிபார்க்கத்தக்க உண்மைகளையும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது தந்தை தெரிவித்த விமர்சனங்கள் தன்னுடையதல்ல என டிரம்பின் மகள் இவான்கா ஒதுங்கி கொண்ட சில மணிநேரங்களுக்கு பின், இந்த கூற்று வந்துள்ளது.

அதிபராவதற்கு முன்னரும், அதிபராக இருக்கும் இப்போதும், டிரம்ப் ஊடகங்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

"பத்திரிகையாளர்கள் மக்களின் எதிரிகள்" என்று டிரம்ப் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

வியாழக்கிழமை காலையில் "போலிச் செய்திகள் உண்மையான அச்சுறுத்தல்" என்று தனது தந்தையின் ட்விட்டர் பதிவுக்கு பின்னர், இந்த விமர்சனங்கள் தன்னுடைய கருத்தல்ல என்று இவான்கா கூறிவிட்டார்.

ஆனால், “ஊடகங்கள் எதிரிகளல்ல” என்று கூற வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் வியாழக்கிழமை மறுத்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் கூட்டத்தில் இருந்து சிஎன்என் செய்தியாளர் வெளியேறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: